தோனியின் சம்பளம் குறைப்பு.... எவ்வாளவு தெரியுமா? யாரும் எதிர்பார்க்காத அதிரடி ட்விஸ்ட்
2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக மெகா ஏலம் நடைபெறவுள்ளது.
இந்த முறை புதிய அணிகள் வருவதால் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்து கொள்ள முடியும்.
தற்போது அனைத்து அணிகளும் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பட்டியல் தனி கவனம் ஈர்த்துள்ளது.
அந்த அணியின் முதன்மை தேர்வாக கேப்டன் எம்.எஸ்.தோனி இருப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
அது மட்டும் இல்லை தோனிக்கு ரூ.16 கோடி ஊதியமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இன்று திடீர் ட்விஸ்டாக தோனி 2வது வீரராக தக்கவைக்கப்பட்டு ரூ.12 கோடி ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அவரின் வயது காரணமாக பார்க்கப்படுகிறது. தோனியின் இடத்தில் முதன்மை வீரராக சீனியர் ஆல்ரவுண்டர் ஜடேஜா அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு ரூ. 16 கோடி ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் அடுத்த சிஎஸ்கே கேப்டனாக கூட செயல்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது.
இது தோனி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.