ஐயப்ப பக்தர்களுக்கு கைகுலுக்கி வழியனுப்பிய நடிகர் யோகிபாபு- வைரலாகும் வீடியோ
ஐயப்ப பக்தர்களுக்கு கைக்குலுக்கி வழியனுப்பிய நடிகர் யோகிபாபுவின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் யோகிபாபு
தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு, இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "லொள்ளு சாப" என்ற நகைச்சுவைத் தொடரில் சிறு வேடங்களில் நடித்து தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கினார் நடிகர் யோகி பாபு.
இதனையடுத்து, வெள்ளித்திரையில் ‘யோகி’ என்ற படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
தமிழ் சினிமாவில் பல கதாபாத்திரங்களில் நடித்து பல தடைகளை கடந்து ஒரு நகைச்சுவளராக பிரபலமாகியுள்ளார் யோகி பாபு.
3 முறை சிறந்த நகைச்சுவையாளர் விருதினை பரியேரும் பெருமாள், கோலமாவு கோகிலா, ஆண்டவன் கட்டளை திரைப்படத்திற்காக பெற்றுள்ளார். சமீபத்தில் வெளியான ‘வாரிசு’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தார்.
பக்தர்களை வழியனுப்பிய நடிகர் யோகிபாபு
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு கைக்குலுக்கி நடிகர் யோகிபாபு வழியனுப்பினார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
— Yogi Babu (@iYogiBabu) April 19, 2023