மஞ்சள் பற்களை வெண்மையாக்க வேண்டுமா? பற்பசையில் இதை கலந்தால் போதும்
ஒருவரின் ஆளுமை அழகை வெளிக்காட்டுவது வெள்ளை மற்றும் பளபளப்பான பற்கள் ஆகும். முத்துக்களைப் போலப் பிரகாசிக்கும் பற்கள் இருந்தால் ஈர்க்க முடியும்.
அதே சமயம் மஞ்சள் மற்றும் அழுக்கு படிந்த பற்களால் பல சங்கடங்களைச் சந்திக்க நேரிடலாம் பற்கள் சுத்தமாக இல்லாவிட்டால், வெளிப்படையாக வாய்விட்டுச் சிரிக்க கூட முடியாது.
இதற்கு காரணம் குட்கா மற்றும் வெற்றிலை உட்கொள்வது, புகைபிடித்தல், மோசமான வாய் பராமரிப்பு அல்லது தவறான உணவு முறை போன்ற பல காரணங்களாகும்.
இதனால் ஒரு சிலர் மஞ்சள் மற்றும் அழுக்குப் படிந்த பற்களை வெண்மையாக்க, கடைகளில் கிடைக்கும் விலை உயர்ந்த பல் பொடியைப் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் இதை விட இதற்குப் பதிலாக இயற்கையான பொருட்களைக் கொண்டு, வீட்டிலேயே பற்களை வெண்மையாக்கும் வழிமுறைகளை உருவாக்க முடியும். இதனால் நமது பணமும் நம்மிடம் சேமிக்கப்படும். அது என்ன வழிமுறை என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பற்களை வெணிமையாக்குதல்
பேக்கிங் சோடா: பேக்கிங் சோடா ஒரு இயற்கையான வெண்மையாக்கும் பொருள். இது பற்களில் உள்ள கறைகளை நீக்கி அவற்றை பளபளப்பாக மாற்ற உதவுகிறது.
உங்கள் வழக்கமான பற்பசையில் அரை டீஸ்பூன் பேக்கிங் சோடாவை கலக்கவும். வாரத்திற்கு 2-3 முறை இந்த பேஸ்ட்டைக் கொண்டு பிரஷ் செய்யவும். இப்படி செய்தால் பற்கள் வெண்டையாகும். ஆனால் அதிகதாக பயன்படுத்த கூடாது.
எலுமிச்சை சாறு: எலுமிச்சையில் இயற்கை அமிலம் உள்ளது, இது பற்களில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய உதவும். மஞ்சள் பற்கள் பளபளக்க இதை பயன்படுத்தலாம்.
பற்பசையில் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும். இந்த கலவையுடன் மெதுவாக துலக்கவும். அதிகப்படியான அமிலம் பற்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால், வாரத்திற்கு 1-2 முறை மட்டுமே பயன்படுத்தவும்.
மஞ்சள் : மஞ்சள் ஒரு இயற்கை கிருமி நாசினியாகும், இது பற்களில் உள்ள மஞ்சள் நிறத்தை நீக்குவது மட்டுமல்லாமல், அவற்றை ஆரோக்கியமாகவும் மாற்றுகிறது. பற்களை சுத்தம் செய்வதற்கும் மஞ்சளைப் பயன்படுத்தலாம்.
பற்பசையில் சிறிது மஞ்சள் தூள் கலந்து கொள்ளவும். இதை துலக்கி சில நாட்களில் மாற்றத்தை பார்க்கலாம். மஞ்சளை சிறிது தேங்காய் எண்ணெய் கலந்தும் பயன்படுத்தலாம்.
கரி தூள்: கரிக்கு அழுக்கு உறிஞ்சும் தன்மை உள்ளது, இதன் காரணமாக பற்களின் வெண்மையை அதிகரிக்க உதவுகிறது. இந்த வீட்டு வைத்தியம் உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
பற்பசையில் ஒரு சிட்டிகை கரி பொடியை கலக்கவும். இந்தக் கலவையைக் கொண்டு துலக்கினால் பற்களின் மஞ்சள் நிறம் நீங்கும். வாரத்திற்கு 1-2 முறை மட்டுமே பயன்படுத்தவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |