"நான் மட்டும் பண்ணல கம்ருதினும் சேர்ந்து தான் பண்ணான்"... ஒப்புகொண்ட பார்வதி
பிக் பாஸ் பார்வதி தனக்கு வெளியிலும் உள்ளேயும் கிடைத்த விமர்சனத்தை பற்றி தற்போது தனது கருத்தை வெளியிடடுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 9 பார்வதி
பிக் பாஸ் சீசன் 9 ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை பெற்று வந்தது. இந்த நிகழ்ச்சிக்கு எதிராக மக்கள் போராட்டமே செய்தனர்.
இத்தனை தடைகள் வந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி நிறுத்தப்படபாமல் நடந்து கொண்டு தான் இருந்நது. மொத்தம் 23 போட்டியாளர்களில் ஒருவர் தான் வி.ஜே பார்வதி. இவர் வீட்டிற்குள் இருக்கும் போது மக்கள் ம்த்தியில் பெரும் விமர்சனத்தை வாங்கி வந்தார்.

அதே போல தான் கம்ருதினும். கம்ருதின் மன்னர் கொஞ்சம் குழப்பமாக இருந்தாலும் பின்னர் சரியாக நடந்து கொண்டு மக்கள் ஆதரவை பெற்றார்.
பின்னர் சிறுது நாளில் பார்வதிக்கும் கம்ருதினுக்கும் நட்பை தாண்டி ஒரு நல்ல உறவு உருவானது. இதற்கு பின்னரும் பார்வதி பல சமயங்களில் மக்களால் வெறுக்கபட்டார்.
இந்த நிலையில் பார்வதி மற்றும் கம்ருதின் சான்ராவை கார் டாஸ்கில் கீழே தள்ளி விட்டதன் காரணமாக இருவருக்கும் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டனர்.

ஒப்பு கொண்ட பார்வதி
ரெட் கார்ட் கொடுக்கட்டதை அடுத்து மக்கள் எல்லோரும் கம்ருதின் பாவம் என கருத்து தெரிவித்து வந்தனர். பாருவிற்கு இது தேவை தான் எனவும் கருத்து தெரிவித்து வந்தனர்.
பார்வதியுடன் கம்ருதின் சேராமல் இருந்து இருந்தால் அவனுக்கு இந்த நிலை வந்திருக்காது என எல்லோரும் கூறினார்கள். இந்த நிலையில் தற்போது பார்வதி ஒரு பேட்டியில் இவ்வாறு பேசி உள்ளார்.

அதாவது "பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் சரி, வெளியே வந்த பிறகும் சரி நான்தான் கன்டென்ட். வெளியே வந்த பிறகு மற்ற ஹவுஸ் மேட்ஸ் பற்றி தரக்குறைவாக பேசியதே கிடையாது.
எனக்கு நடிக்க தெரியாது. அதனால்தான் எனக்கு வாழ்க்கை கடினமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். நானும், கம்ருதீனும் சேர்ந்துதான் ஒரு விஷயத்தை செய்தோம்.

ஆனால் பழியை மட்டும் ஏன் பாரு மீது போடுகிறீர்கள். இதெல்லாம் ரொம்ப பிற்போக்கு தனமாக இருக்கு.
அப்படி கூறினார். இதனடிப்படையில் ரசிகர்கள் சான்ராவை தள்ளி விட்டதை பாரு ஒரு வழியாக ஒப்பு கொண்டு விட்டார் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |