அஜித்திற்கு சொந்தகாரியாகும் பிக்பாஸ் பிரபலம்! சமூக வலைத்தளங்களில் கசிந்து வரும் புகைப்படங்கள்
நடிகை சாலினியின் சகோதரருடன் நடிகை யாஷிகா நெருக்கமாக இருக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சினிமாவில் பலத்த வரவேற்பு கிடைத்த படம்
தமிழ் சினிமாவில் “கவலை வேண்டாம்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த்.
இதனை தொடர்ந்து யாஷிகாவிற்கு பெரியளவில் பட வாய்ப்புகள் இல்லை. பல முயற்சிகளுக்கு மத்தியில் “ இருட்டு அறையில் முரட்டு குத்து ” என்ற திரைப்பட வாய்ப்பு கிடைத்தது.
இந்த திரைப்படத்தில் இளைஞர்கள் மத்தியில் பயங்கரமான பிரபல்யமடைந்தார்.
இந்த ஆதரவை வைத்து யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார்.
இதனால் இவருக்கு பலத்த சர்போர்ட் கிடைக்கும் என எதிர்பார்த்தார்கள். பிக்பாஸிலிருந்து வெளியேறிய பின்னர் பெரிய பெரிய நடிகர்களுடன் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.
காதலிக்கின்றார்களா?
இந்த நிலையில் நண்பர்களுடன் இணைந்து பயணிக்கும் போது கார் விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் இவரின் நண்பியொருவரும் உயிரிழந்துள்ளார்.
யாஷிகாவிற்கும் பலத்த அடிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதனை தொடர்ந்து யாஷிகா தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இப்படியொரு நிலையில் நடிகை சாலினி சகோதரர் ரிச்சர்ட் ரிஷிவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்த புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள் இவர்கள் இருவரும் காதலிப்பதாக உறுதி செய்துள்ளார்கள்.
ஆனால் இது தொடர்பில் யாஷிகா சார்பிலும் ரிஷி சார்பிலும் எந்தவதமான தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.