கால் மேல் கால் போட்டு உட்காருவது தவறு எனக் கூறுவது ஏன் தெரியுமா?....
பொதுவாக கால் மேல் கால் போட்டு அமர்வது அதிக உடல்நலனுக்கு கேடு விளைவிக்கின்றது என்பது நம்மில் பலருக்கும் தெரியாமல் இருந்து வருகின்றது. தற்போது ஆண்களை காட்டிலும் பெண்கள் மத்தியில் கால் மீது கால் போட்டு அமரும் பழக்கம் அதிகமாக இருக்கிறது. கால் மீது கால் போட்டு அல்லது கால்களை மடக்கி ஒரே நிலையில் பல மணி நேரம் அமர்ந்திருத்தல் ஆழப் பெரோன்னியல் நரம்பு (peroneal nerve ) எனும் பாரலசிஸ் உண்டாக காரணமாக அமைகிறது.
முக்கியமாக கால்களை க்ராசாக, கால் மீது கால் போட்டு அமரும் போது இது உண்டாக நிறைய வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு கால் மேல் கால் போட்டு அமர்வது இரத்த அழுத்தம், அது சம்பந்தமாக பிற நோய்கள் வருவதற்கு அதிகமாக காரணம் இருக்கின்றது. மேலும், இது உடல் முழுவதும் சீரான முறையில் செல்லும் இரத்த ஓட்டத்தை தடை செய்து, ஆரோக்கியத்தை சீர்குலைய செய்கிறது.
இரத்த ஓட்டம் கால் மீது கால் போட்டு உட்காருவதால், கீழ் உடலை விட மேல் உடலில் அதிக இரத்த சுழற்சி உண்டாகிறது. இதனால் இதயம் அதிகமாக இரத்தத்தை பம்ப் செய்கிறது. இது இரத்த அழுத்தம் உண்டாக முக்கிய காரணமாகிறது இடுப்பு நிலை நீண்ட நேரம் கால் மீது கால் போட்டு அமர்வது, இடுப்பின் சமநிலையை பாதிக்கிறது.
இதனால், தசை சார்ந்த பிரச்சனைகளும் உண்டாகலாம். மூட்டு வலி அதிகமாகலாம். ஸ்பைடர் வெயின் என்று அழைக்கப்படும் பிரச்சினையும் இதனால் ஏற்படுகின்றது. மூன்று மணிநேரம்: ஒரு நாளில் மூன்று மணி நேரத்திற்கும் மேல் நீங்கள் கால் மீது கால் போட்டு உட்காருவதால். முதுகு வலி, கழுத்து வலி, இடுப்பில் அசௌகரியமான உணர்வு போன்றவை உண்டாகிறது. எனவே, முடிந்த வரை இனிமேல் கால் மீது கால் போட்டு அமர்வதை தவிர்த்துவிடுங்கள்.

