ஷாருக்கானுடன் டிடி எடுத்துக்கொண்ட புகைப்படம் - ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட நாளிதழ்!
விஜய் டிவி சீனியர் ஆங்கர் டிடி என்கிற திவ்யதர்ஷினி கடந்த பல ஆண்டுகளாக மறுக்கமுடியாத தொலைக்காட்சி ஆளுமையாக இருந்து வருகிறார். விருது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் முன்னணியாக உள்ளார்.
இந்த நிலையில், அண்மையில், இவரைப்பற்றி பிரபல நாளிதழ் ஒன்று மோசமாக சித்தரித்து எழுதியிருக்கும் விஷயம் தான் ரசிகர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது.
அவர்கள் வெளியிட்டதில், விவாகரத்துக்கு பின் டிடி தனிமையில் உள்ளார். அவருடைய நேரத்தை சுற்றுலா செல்வது போன்ற விஷயங்களில் செலவழிக்கிறார் எனக்கூறியுள்ளனர்.
மேலும், சமீபத்தில் நயன்தாராவின் திருமணத்தில் கலந்துகொண்ட டிடி அங்கு நடிகர் ஷாருக்கானுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அவரை அரவணைத்து புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியை வெளியிப்படுத்திய டிடி, அதையும் அந்த பத்திரிக்கையாளர் கேவலமாக சித்தரித்து எழுதியது தான் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதை பார்த்த ரசிகர்கள் சம்பந்தப்பட்ட அந்த நாளிதழை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதனால், உடல் முழுவதும் வக்கிரம் நிறைந்த ஒருவனால் மட்டும் தான் இப்படி எழுத முடியும் என்றும், அவரால் ஒட்டுமொத்த பத்திரிக்கையாளர்களுக்கும் அவமானம் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
