பிரபல நடிகரை கட்டியணைத்து உருக்கமாக டிடி வெளியிட்ட புகைப்படம்! இணையத்தில் வைரல்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியின் தொகுப்பாளரான டிடி 10 ஆண்டுக்கு மேல் பணிபுரிந்து பல ரசிகர்களை தன் பேச்சால் கவர்ந்து உள்ளார். இவரது கலகலப்பான பேச்சுக்கும், சிரிப்புக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
வெள்ளித்திரையிலும் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் இவர், பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் திரையுலகில் நுழைந்து 30 வருடங்கள் ஆன நிலையில், அவருக்கு வாழ்த்து கூறி அவரை இறுக்க கட்டி அணைத்தபடி போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
மேலும், அவர் வெளியிட்ட பதிவில், “நான் அவரை இறுகக் கட்டிப்பிடித்து, சொல்ல நினைத்த அனைத்தையும் கூறினேன்.
நீண்ட வருஷங்கள், ஏராளமான நினைவுகள், ஏராளமான மகிழ்ச்சி நீங்கள் கொடுத்துள்ளீர்கள்.
நீங்கள் சிறந்த வாழ்விற்கு மட்டுமே தகுதியானவர் உங்கள் இதயத்தின் மகிழ்ச்சிக்காக தினமும் பிரார்த்தனை செய்வேன்.
பின், நீங்கள் சினிமா துறையில் 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் நேரத்தில் இந்த புகைப்படத்தை வெளியிட நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என கூறியுள்ளார்.
இந்த புகைப்படம் ஆனது நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தின் போது எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது.