முகப்பருக்கால் உங்கள் அழகு குறைந்துக் கொண்டே செல்கிறதா? அப்போ இனி இந்த உணவுகளை சாப்பிட்டாதீங்க!
பொதுவாகவே பெண்கள் தங்களுடைய முகத்தை எப்போது அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தான் நினைப்பார்கள். முக அழகை பராமரிப்பதற்காக பலரும் பல வழிகளை மேற்கொள்வார்கள்.
அதிலும் முக அழகைக் கெடுக்கும் முகப்பருக்கள் வந்துவிட்டாலே பெண்களுக்கு பெரும் தொல்லைதான். இது பெண்கள், ஆண்கள் என இருபாலரும் சந்திக்கும் ஓர் சரும பிரச்சனையாகும்.
மேலும், இந்த முகப்பருக்களைப் போக்குவதற்கு நீங்கள் சில உணவு முறைகளை பின்பற்றியும், தவிர்த்தும் வந்தால் உங்கள் முகத்தை பொழிவாக வைத்துக் கொள்ளலாம்.
முகப்பரு இருப்பவர்கள் சாப்பிட வேண்டியவை
சாக்லெட்டில் இருக்கும் முக்கிய மூலப் பொருளான கொக்கோவில் குறைவான சக்கரையும் பால் சேர்த்து தயாரிப்பதால் சாக்லெட் முகப்பருக்களை கட்டுப்படுத்தும்.
தினமும் அதிகளவு நார்ச்சத்து உணவுகளை சாப்பிட்டு வந்தால் இரத்த சக்கரை அளவு கட்டுக்குள் வந்து முகப்பருக்கள் குறையும்.
தினமும் ஓட்ஸ், பீன்ஸ், கேரட், ஆப்பிள் போன்ற உணவுகளை தினமும் சாப்பிட்டால் முகப்பரு குறையும்.
சால்மன் மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் இருப்பதால் பருக்களுடன் தொடர்புடைய IGF - 1 புரதத்தை குறைக்கும்.
ஒரு நாளில் 2 அல்லது 4 பாதாம் மற்றும் பிரேசில் நட்ஸ் சேர்த்து கொள்வதால் முகத்தில் இருக்கும் பருக்கள் குறையும்.
தவிர்க்க வேண்டியவை
நீங்கள் தினமும் எவ்வளவு பால் குடிக்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்களுக்கு முகப்பரு அதிகரிக்கும். அதனால் தினமும் பால் குடிப்பதை குறைப்பது நல்லது.
நீங்கள் தினமும் உண்ணும் உணவில் சக்கரை மற்றும் கார்போ சத்துக்கள் அதிகம் இருந்தால் இன்சுலின் சுரக்கும் போது ஹார்மோன்கள் பாதிக்கப்பட்டு சருமத்தில் எண்ணெய் உற்பத்தி அதிகமாகி பருக்கள் ஏற்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |