50 வயதிலும் 20 வயது போல் தோற்றம்! பிரபல நடிகை சொல்லும் ஹெல்த் டிப்ஸ் என்ன தெரியுமா?
சினிமாவில் ஏகப்பட்ட நடிகர், நடிகைகள் இருந்தாலும் ஒரு சிலர் மாத்திரம் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள்.
அந்தவகையில், தெய்வ திருமகள் திரைப்படத்தில் குணச்சித்திர நடிகையாக அறிமுகமானவர் தான் ரித்திகா ஸ்ரீநிவாஸ்.
தெய்வ திருமகள் திரைப்படத்தைத் தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு, மாஸ், ஆரோகணம், சிங்கம், 2, நிமிர்ந்து நில், பிரியாணி போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
இவ்வாறு பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் வழக்கு எண் திரைப்படத்தில் இவர் வில்லியாக நடித்து தான் பிரபலமாகியிருக்கிறார். அதற்குப் பிறகு ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக் திரைப்படத்திலும் பிரதானமான கதையை ஏற்று நடித்திருக்கிறார்.
50 வயதிலும் அழகில் ஜொலிக்க காரணம்
நடிகை ரித்திகா ஸ்ரீநிவாஸனுக்கு 50 வயதாகிய நிலையிலும் அழகிலும், இளமையிலும் துளிக் கூட குறையாமல் இருக்கும் அளவிற்கு இருக்கிறார். இவரின் அழகிற்கு பல விடயங்களைத் தான் இங்கு பகிர்ந்திருக்கிறார்.
உடல் அழகையும் ஆரோக்கியத்தையும் பராமரிப்பதற்கு ABCஜுஸ் எடுத்துக் கொள்வாராம். அதாவது ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஜுஸ் இது உடலுக்கு அதிக ஆரோக்கியத்தையும், அழகையும் கொடுக்கும்.
மேலும், இது தவிர இளநீர் மற்றும் அதிக தண்ணீர் குடிப்பது தோல் சுருக்கங்கள் இல்லாமல் போகும் என்பதையும் சொல்லியிருக்கிறார்.
இது தவிர முகத்திற்கு மாத்திரமல்ல கூந்தலுக்கும் என்னென்ன இயற்கையாக செய்ய முடியுமோ அவற்றை பகிர்ந்திருக்கிறார், அது பற்றிய காணொளி மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |