அட என்னது ஒரு கிலோ பன்னீர் 85 ஆயிரமா? உலகிலேயே இந்த வகை பன்னீருக்கு தான் மவுசு அதிகமாம்!
நாளுக்கு நாள் நாட்டில் பொருளாதார விலை ஏறிக்கொண்டிருக்கும் நேரத்தில் உணவு பொருட்களின் விலை கடும் உயர்வில் உள்ளது. தங்கம் விற்கிற விலை விட, பன்னீருக்கு இருக்கும் மவுசு கொஞ்சம் அதிகம் தான்.
ஒரு கிலோ இவ்வளவா?
ஏனென்றால், ஒரு கிலோ பன்னீரை 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறார்கள். உலகிலேயே மிகவும் விலை அதிகமான இந்த பன்னீர், சீஸ் யூரோ மதிப்பில் கிலோ 800 முதல் 1000 யூரோ என விற்கப்படுகிறது.
இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.82 ஆயிரம். இன்றைய நிலவரப்படி உலகிலேயே மிக அதிகமான விலை மதிப்புள்ள பன்னீர் இதுவாகத்தான் இருக்க முடியும் என பிரபல ஆங்கில செய்திதாள் வெளியிட்டுள்ளது.

ஏன் இவ்வளவு விலை?
இந்த சீஸ் ஆனது மாட்டுப் பாலிலோ, ஆட்டுப் பாலிலோ, ஒட்டகப் பாலிலோ தயாரிக்கப்படவில்லை. அப்படி தயாரிக்கப்பட்டிருந்தால் நிச்சயம் விலைகுறைவாக இருந்திருக்கும். ஆனால், இவை முழுக்க முழுக்க கழுதைப்பால் கொண்டு தயாரிக்கப்படுகிறதாம்.
தும்பைப்பூ போன்ற வெண்மை, கீரீமியாக கழுதைப்பாலில் எடுக்கப்பட்ட சீஸ் இருக்கிறது. விளையும் நாடு செர்பியாவில் உள்ள ஜஸாவிகாவில் உள்ள பண்ணையில் தான் இந்த கழுதை சீஸ், கழுதை பன்னீர் என கழுதை பாலில் தயாரிக்கின்றனர்.

இதுகுறித்து அந்த பண்ணை நிர்வாகம் தெரிவிக்கையில், ஒரு கிலோ சீஸ் எடுக்க மட்டுமே 25 லிட்டர் கழுதைப்பால் தேவைப்படுகிறது என தெரிவித்துள்ளனர். பாட்டிலில் அடைத்தும் கழுதைப் பாலை இந்த பண்ணை நிர்வாகம் விற்பனை செய்கிறது.
அதுமட்டுமின்றி எகிப்து ராணி கிளியோபாட்ராவின் அழகின் ரகசியமே கழுதைப்பாலில் குளிப்பது தான் என்பது தெரியுமா அந்த அளவிற்கு இது கிடைப்பது அரிது.

அரிதானவை
உலகிலேயே அதிக விலை கொண்ட உணவான இத்தாலியின் ட்ரூப்லெஸ், வாக்யு பீப் ஆகியவற்றோடு கழுதை சீஸ், பன்னீரும் இடம் பெற்றுவிட்டது. மேலும், இத்தாலியின் அரிதான பசுக்களின் பாலில் இருந்து எடுக்கப்படும் ‘காசியோகாவாலோ போடலிகோ’ என்ற சீஸும் விலை உயர்ந்தது.
இவை, இத்தாலியின் இந்த அரிதான மாட்டினங்கள் மே, ஜூன் மாதங்களில் மட்டுமே பால் சுரக்கும். மற்ற மாதங்களில் பால் சுரக்காது என்பதால் இவை அரிதாக விற்கப்படுகிறது.