ஒரு மணி நேரத்தில் 1123 மரங்களை கட்டி அணைக்க முடியுமா? உலக சாதனை படைத்த இளைஞன்
கின்னஸ் உலக சாதனையின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் குறித்த இளைஞன் ஒருவர் 1100 க்கும் மேற்பட்ட மரத்தை கட்டி அணைத்த வீடியோ தற்போது ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
ஒரு உலக சாதனை படைப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. இதற்கு பொறுமையும் பல வருட பயிற்சியும் மிகவும் முக்கியம்.
இதன் மூலம் பல மக்கள் தங்களின் பல திறமைகளை வெளிப்படுத்தி உள்ளனர். அந்த வகையில் ஒரு இளைஞன் 1100 -க்கும் மேற்பட்ட மரத்தை கட்டி அணைத்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.
அதுவும் கொடுக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள். இவர் 29 வயதான கானாவை சேர்ந்த அபூபக்கர் தஹிரு என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் வனவியல் மாணவர் ஒரு மணி நேரத்தில் 1123 மரங்களை கட்டி அணைத்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.
மொத்தமாக அவர் ஒரு நிமிடத்தில் 19 மரங்களை கட்டி அணைத்துள்ளார். இந்த சாதனையை அவர் யுனைடெட் ஸ்டேட்ஸ் அலபாமாவில் உள்ள டஸ்கிகீ தேசிய காட்டில் நிகழ்த்தியுள்ளார்.
இதில் இரு கைகளாலும் கட்டி அணைக்க வேண்டும் என்றும், ஒரு முறைக்கு மேல் ஒரே மரத்தை அணைக்க கூடாது கட்டளைகளுக்கு அமைய இந்த இளைஞன் சாதித்து காட்டியுள்ளார். குறித்த இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |