17 வயதில் திருமணம் செய்து தாயான பெண் இப்போ என்ன பண்ணுராங்கணு தெரியுமா?
17 வயதில் திருமணம் செய்து கொண்டு தாயான பெண் தற்போது பளு தூக்கும் வீராங்கனையாக மாறி சாதித்து இருக்கும் இந்த இளம்பெண்ணின் வீடியோ இன்ஸ்டாகிராமில் பலராலும் வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
ஒரு பெண் தனது இலட்சியத்தை அடைவதற்கு முன்பே அவளை திருமணம் எனும் பந்தத்திற்குள் கொண்டு சேர்ந்து விடுகிறாள். ஆனால் குறித்த இந்த பெண் திருமணம் ஆகி ஒரு குழந்தை இருந்தும் பளு தூக்கும் வீராங்கனையாக சாதித்து காட்டியுள்ளார்.
இந்த பெண் தன் வாழ்க்கை பயணத்தின் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில் தனக்கு 15 வயதாக இருந்தபோது, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றதையும், அது தொடர்பான புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.
அப்போது, தனது மகள் வளர்ந்துவிட்டதாகக் கூறி, தனக்கு திருமணம் செய்து வைக்க தனது தந்தை கூறியதை குறிப்பிட்டுள்ள அவர், 16 வயதில் நிச்சயதார்த்தம் நடந்ததையும், 17 வயதில் திருமணம் செய்து கொண்டதையும் குறிப்பிட்டுள்ளார்.
திருமணமான சில மாதங்களிலேயே கர்ப்பமாகிவிட்டதாகவும், 18 வயதில் ஒரு குழந்தையை பெற்றெடுத்ததாகவும் கூறியுள்ளார். தற்போது பளு தூக்கும் வீராங்கனையாக உள்ள இவரின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |