தினமும் 12 மணி நேரம் வேலை -91 வயது முதியவரின் ஆரோக்கிய ரகசியம்
தினமும் 12 மணி நேரம் வேலை செய்தும் 91 வயதில் ஆரோக்கியமாக இருக்கும் முதியவரை பற்றி நடிகர் மாதவன் தன் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து தன் வியப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
முதியவரின் ஆரோக்கிய ரகசியம்
இன்றைய தலைமுறையினர் பலரும் வேலை செய்வதற்கே சோம்பேறி பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் சிங்கப்பூரை சேர்ந்த 91 வயது முதியவரொருவர் இப்போதும் ஓய்வு பெற மனமின்றி 12 மணி நேரம் உழைத்துக் கொண்டிருக்கிறார் யாரால் நம்ப முடியும்.
ஆனால் அது தான் உண்மை. சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவை சேர்ந்த ட்ராவலரான ஜேடன் லைங் என்பவர் சிங்கப்பூர் சென்றிருந்த போது 91 வயது முதியவர் பொது கழிப்பிடத்தை சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது அந்த இடத்திற்கு வந்த அந்த குறிப்பிட்ட ட்ராவலர் அதை பார்த்துள்ளார்.

முதியவரின் ஆரோக்கியம்
அப்போது தான் அந்த முதியவர் தன்னை பற்றி கூறியுள்ளார். அதாவது தனக்கு 91 வயதாகின்றது என்றும் ஆனால் தினமும் 12 மணி நேரம் வேலை செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதை கேட்டு அந்த நபர் ஆச்சரியமடைந்துள்ளது. அதன பின்னர் அந்த முதியவர் நான் என ஆரோக்கியத்திற்காக தனியே எதையும் செய்யவில்லை.
என்னுடைய உணவு - வேலை - தூக்கம் என மூன்றையும் சுழற்சி முறையில் செய்து வருவதாகவும் கூறினார். இதை கேட்டு குறிப்பிட்ட அந்த நபர் முதியவருக்கு தன்னார் முயன்ற பணத்தை கொடுத்து உதவி செய்துள்ளார்.

இந்த காணொளியின் கீழ் பல இணையவாசிகள் அந்த முதியவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சுமார் 1 மில்லியன் பேர் வீடியோவை லைக் செய்துள்ளனர். 14.5 மில்லியன் பேர் தற்போது வரை இந்த வீடுியோவை பார்த்து பாராட்டி உள்ளனர்.
நேற்றைய தினம் நடிகர் மாதவன் இதை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்து முதியவர் மீதான தன் வியப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதில் ஒரு விடயம் நீங்கள் கவனிக்க வேண்டும்.
அதாவது முதியவர் என்ன தான் தான் உயற்பறிற்ச்சி செய்யவில்லை என்று கூறினாலும் அவர் அன்றாடம் செய்யும் வேலையே அவருக்கு உடற்பயிற்ச்சியாக இருக்கும்.

அந்த வகையில் முதியவர் அவர் வாழ்வின் மூலம் நமக்கு சொல்ல வருவது, ‘ஆரோக்கியமான நீண்ட வாழ்க்கைக்கு, உடல் இயக்கம் இருந்து கொண்டே இருக்க வேண்டும்’ என்பதே.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |