மந்திரவாதி கூறிய ஒரு வார்த்தை.. நம்பி சென்ற பெண்ணுக்கு இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி!
பேய்யை ஓட்டுவதாக கூறி இளம்பெண்ணிடம் ஒருவரிடம் 73 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்னதான் அறிவியல், தொழில்நுட்பம் என உலகம் ஒருபுறம் வளர்ந்துகொண்டே சென்றாலும், இன்றளவும் மாந்த்ரீகம், மந்திரவாதி, பேய் போன்றவற்றின் மீதான நம்பிகையும் சில இடங்களில் அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது.
அந்த வகையில், 36 வயது கொண்ட பெண் ஒருவர் கஷ்டத்தில் இருந்து வந்துள்ளார். இதனால், அவர் சில நபர்களின் பேச்சைக்கேட்டு மந்திராவதியை நாடியுள்ளார். உடனே அந்த பெண்ணும் அந்த மந்திரவாதியை சென்று பார்த்துள்ளார். அங்கு சென்ற இடத்தில், "உனது உடலில் பேய் இருக்கிறது" என மந்திரவாதி அந்த பெண்ணிடம் கூறியுள்ளார்.
இதனை கேட்டு அந்த பெண் அதிர்ச்சியடைந்து, தான் என்ன செய்யவேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு அந்த மந்திரவாதி, பேய் ஓட்டுவதாகவும், அதற்கு பூஜை பரிகாரத்திற்கு 70 லட்சம் வரை செலவாகும் எனவும் மந்திரவாதி கூறியுள்ளார். அதற்கு அந்த பெண்ணும் சம்மதம் தெரிவிக்க, முதல் தவணையாக 25,080 வழங்கியுள்ளார். பின்னர் 4000 வழங்கியுள்ளார்.
இறுதியில் அந்த மந்திரவாதி பணத்தை வாங்கிக்கொடு சில பல மாந்த்ரீக வேலைகளை செய்துகாட்டி அந்த பெண்ணை ஏமாற்றியுள்ளார்.
இதனையடுத்து, அந்த பெண் தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளார். தற்போது இந்த வழக்கு குறித்த விசாரணை நடைபெற்றுவருகிறது.
உடலில் இருக்கும் பேய்யை ஓட்டுவதாக கூறி, 36 வயது பெண்ணிடம் நபர் ஒருவர் 73 லட்சம் ஏமாற்றி வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.