Viral VIdeo: மீனை வேட்டையாடிய கழுகுக்கு ஏற்பட்ட ஆபத்து! மயிரிழையில் உயிர்தப்பிய தருணம்
கழுகு ஒன்று ராட்சத மீனை வேட்டையாடி சென்ற நிலையில், அடுத்த நொடியில் கழுகை பிடிப்பதற்கு பின்னே சுறா ஒன்று வந்துள்ள காட்சி வைரலாகி வருகின்றது..
கழுகின் மீன் வேட்டை
பொதுவாக கழுகின் பார்வை என்பது மிகவும் கூர்மையானதாக இருக்கும். உயர பறந்து செல்லும் போது தனக்கான உணவு தண்ணீருக்குள் இருந்தாலும் அசால்டாக வேட்டையாடிவிடுகின்றது.
தற்போது அதனை 100 சதவீதம் உண்மையாக்கும் அளவிற்கு பல காட்சிகள் வெளியாகி வருகின்றது. இங்கும் கழுகின் காணொளி ஒன்று பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

மிகப்பெரிய மீனைப் பிடித்த கழுகின் காட்சி மிகவும் பக்கத்தில் வைத்து படமாக்கப்பட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவெனில் கழுகு மீனை எடுத்துக்கொண்டு நீரிலிருந்து எழுந்துள்ளது.
நொடியில் கழுகை பிடிப்பதற்கு சுறா ஒன்று மறைமுகமாக மின்னல் வேகத்தில் வந்துள்ளது. இக்காட்சி பார்வையாளர்களை புல்லரிக்க வைத்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |