இந்த குணங்களைக் கொண்ட பெண்கள் வீட்டிற்கு மகாலட்சுமி - சாணக்கியரின் அறிவுரை
ஐந்து குணங்களைக் கொண்ட பெண்கள் வீட்டிற்கு மகாலட்சுமியாக விளங்குவார்கள் என்று சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தல் குறிப்பிட்டுள்ளார்.
சாணக்கியரின் அறிவுரை
ஆச்சார்ய சாணக்கியர் தனது காலத்தில் மிகவும் அறிவாற்றல் மிக்கவராகவும், கற்றறிந்தவராகவும் அறியப்படுகிறார். தனது வாழ்நாளில், மனிதகுலத்தின் நலனுக்காக பல வகையான கொள்கைகளை இயற்றினார்.
இந்தக் கொள்கைகள் பின்னர் சாணக்கிய நீதி என்று அழைக்கப்பட்டன. வளமான வாழ்க்கையைத் தேடும் ஒருவர், சாணக்கிய நீதியில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் சாணக்கியர் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு எவ்வகை குணம் இருந்தால் அவர்கள் மகாலட்சுமி போன்றவர்கள் என்பதை குறிப்பிட்டுள்ளார்.

- பொறுமை மற்றும் சகிப்புத் தன்மை
- சாணக்கியரின் கூற்றுப்படி அமைதியான இயல்புடைய பெண்கள் லட்சுமியின் வடிவம் ஆவார்கள்.
- அவர்கள் எந்த ஒரு கடினமான சூழ்நிலையிலும் கோபப்படாமல் சூழ்நிலைக்கு ஏற்ப சிந்தித்து செயல்படும் திறன் கொண்டிருப்பார்கள்.
- குடும்பத்தில் சண்டை, சச்சரவர்களுக்கு இடம் கொடுக்காமல் அமைதியை நிலை நாட்டுவார்கள். சகிப்புத்தன்மையுடன் விளங்கும் இவர்கள்,
- கடினமான காலங்களிலும் கணவருக்கு பக்கபலமாக இருந்து ஊக்கமும், ஆதரவும் அளித்து குடும்பத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வார்கள்.
கல்வி அறிவு மிக்க பெண்கள்
- கல்வி அறிவும், நல்ல ஒழுக்கமும், பண்பாடும் கொண்ட பெண்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு அரணாக திகழ்வார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.
- இவர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் நம்பிக்கையை கைவிடாமல் இருப்பார்கள்.
- சரியான மற்றும் தவறானவற்றை பிரித்து அறியும் அறிவுடனும், பெரிய முடிவுகளை அச்சமின்றி எடுக்கும் விவேகத்துடன் திகழ்வார்கள்.
- தனது கல்வி அறிவால் தெளிவான முடிவுகளை எடுக்கும் இவர்களது செயல்பாடு குடும்பத்தின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
இனிமையாக பேசும் இயல்பு
- மென்மையாகவும், இனிமையாகவும் பேசும் பெண்கள் குடும்பத்தை வழிநடத்த தகுதியானவர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.
- இவர்கள் தங்களது இனிய வார்த்தைகள் மூலம் அனைவரின் மனதையும் வென்று அன்பையும், பாசத்தையும் நிலை நிறுத்துவார்கள்.
- பிறந்த வீடாக இருந்தாலும், புகுந்த வீடாக இருந்தாலும் இரு வீட்டின் கவுரவத்தையும் மதிப்பையும் தங்களது பேச்சால் உயர்த்துவார்கள்.
- இவர்களது மென்மையான பேச்சு குடும்ப உறவுகளை இணைக்கும் பாலமாக செயல்படுகிறது என்று சாணக்கியர் கூறுகிறார்.
பணத்தை சேமிக்கும் திறன்
- அனாவசிய செலவுகளை தவிர்த்து பணத்தை சேமிக்கும் பெண்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று சாணக்கியர் கூறுகிறார்.
- குடும்பத்தின் நிதி நிலைமையை புரிந்து கொண்டு தங்கள் ஆசைகளையும், தேவைகளையும் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டவர்கள் குடும்பத்தை நிதி நெருக்கடியில் இருந்து காப்பாற்றுவார்கள்.
- பணத்தை திறம்பட நிர்வகிப்பதன் மூலம் குடும்பத்தின் பொருளாதார நிலைத்தன்மைக்கும், எதிர்கால தேவைகளுக்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கிறார்கள்.
அனைவரையும் மதிக்கும் பண்பு
- அனைவரையும் மதிக்கும் பண்பானது குடும்பத்தில் உள்ள பெண்ணுக்கு அத்தியாவசியமானது என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார்.
- குறிப்பாக வீட்டில் உள்ள பெரியவர்கள் மற்றும் விருந்தினர்களை மதித்து உபசரிக்கும் பண்பு ஒரு பெண்ணுக்கு மிக அவசியமானது
- என்றும், பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பதன் மூலமும், விருந்தோம்பல் செய்வதன் மூலமும் இவர்கள் குடும்பத்திற்கு மரியாதையும் பெயரையும் பெற்று தருகிறார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.
- அன்பு மட்டுமே உறவுகளை இணைக்கும் என்று இவர்கள் உணர்ந்து செயல்படுவதால் குடும்ப உறவுகள் இறுக்கமாவதாக சாணக்கியர் கூறுகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள்/ ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).