வெளிநாட்டில் தெருவில் வசித்த நபருடன் காதலில் விழுந்த அழகி! அடுத்து நடந்தது என்ன?
கனடாவில் சாலையில் வசித்த நபருடன் காதலில் விழுந்து அவரை இளம்பெண் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களின் சுவாரசிய காதல் கதை குறித்து தெரியவந்துள்ளது.
ஜாஸ்மின் க்ரோகன் என்ற இளம்பெண் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஷாப்பிங் சென்றுள்ளார்.
அப்போது சூப்பர் மார்க்கெட் வெளியே மெக்கவுலி முர்சி என்ற வீடில்லாத சாலையில் வசிக்கும் இளைஞரை அவர் கண்டார்.
நட்பை ஏற்படுத்திய அந்த தருணம்
பின்னர் முர்சிக்கு, ஜாஸ்மின் பண உதவி தர முயன்ற போது அதை வாங்க அவர் மறுத்துள்ளார். அதே சமயம் வாங்கிய பொருட்களை தூக்க முடியாமல் ஜாஸ்மின் திணறுவதை பார்த்த முர்சி அதை கையில் தூக்கி கொண்டு டாக்சியில் வைத்து ஜாஸ்மினுக்கு உதவி செய்தார்.
அந்த ஒரு நொடி இருவருக்கும் நட்பை ஏற்படுத்தியது, இதையடுத்து அன்று இரவே இருவரும் ஒன்றாக சென்று உணவருந்தினார்கள்.
பின்னர் முர்சிக்கு புதிய செல்போன் ஒன்றை ஜாஸ்மின் வாங்கி தந்த நிலையில் இருவரும் அடிக்கடி போன் மூலம் பேசினார்கள்.
தொகுப்பாளினி டிடி கர்ப்பமா? என்ன நடந்தது?
அப்போ காதலர்கள் இப்போ தம்பதிகள்
ஒரு கட்டத்தில் அவர்களின் நட்பு காதலாக மாறியது. தற்போது ஜாஸ்மின் - முர்சிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவர்களின் காதல் கதையை டிக் டாக்கில் ஜாஸ்மின் சமீபத்தில் தான் வெளியிட்டார். ஜாஸ்மின் கூறுகையில், நாங்கள் கடந்து வந்த பாதையை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், எல்லாமே ஒரு காரணத்திற்காக நடக்கும் என்று நம்புகிறோம்.
முர்சி என் வாழ்க்கையை மிகவும் சிறப்பாக மாற்றினார் என்று கூறியுள்ளார்.
தினமும் ஒரு டம்ளர் ரெட் ஒயின் குடித்தால் என்ன நடக்கும்?