இந்த திகதிகளில் பிறந்த பெண்களால் கணவருக்கு கோடீஸ்வர யோகம் உறுதி!
எண்கணித ஜோதிடத்தின் பிரகாரம் நமது வாழ்வில் அனைத்து விடயங்களிலும் எண்கள் தொடர்புப்படுகின்றன. எண்களால் வாழ வைக்கவும் முடியும். அது போல் வீழ்த்தவும் முடியும் என நம்பப்படுகின்றது.
எண் கணித சாஸ்திரம் எனப்படுவது ஒருவர் பெயருக்கும், பிறந்த திகதி, மாதம், வருடம், பெயர் அனைத்தின் கூட்டுத்தொகையாக வரும் எண்ணுக்கும் அவர்களின் எதிர்கால வாழ்விற்கும் இடையில் உள்ள தொடர்பை கணித்து கூறும் சாஸ்திர முறையாகும்.

அதன் பிரகாரம் குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்த பெண்கள் தங்களின் கணவரை கோடீஸ்வரராக மாற்றும் யோகம் கொண்டவர்களாக இருப்பார்களாம். அப்படிப்பட்ட ஆற்றல் மிக்க பிறப்பு எண்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அதிர்ஷ்ட திகதிகள்
எண் கணிதத்தின் படி, அனைத்து மாதத்திலும் 4, 13, 22, அல்லது 31 ஆம் தேதிகளில் பிறந்த பெண்களின் விதி எண் 4 ஆகும். இந்த எண் நிழல் கிரகமான ராகு கிரகத்தால் ஆளப்படுகிறது. ஜோதிடத்தில், ராகு திடீர் நிகழ்வுகளை ஏற்படுத்தும் ஆற்றல் வாய்ந்த கிரகமாக அறியப்படுகின்றது.

அதனால்தான், இந்த எண்ணை விதி எண்ணாக கொண்ட பெண்களுக்கு அனைத்து விஷயங்களும் திடீரென்று நடக்கும். அவர்கள் ஒரே இரவில் அதிர்ஷ்டசாலிகளாக மாறும் யோகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் இயல்பாகவே சிறந்த நிதி முகாமைத்துவ ஆற்றல் கொண்டவர்களாகவும் திருமணத்தின் பின் தங்கள் கணவர்களுக்கு பெரும் செல்வ செழிப்பை ஏற்படுத்தக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

அவர்களைத் திருமணம் செய்த ஆண்களின் அதிர்ஷ்டம் திடீரென பிராசிக்க ஆரம்பிக்கும். சாதாரண சம்பளத்தில் இருந்தர்கள் கோடிகளில் சம்பாதிக்கும் அளவுக்கு திடீர் மாற்றத்தை காண்பார்கள்.
இது அவரது தொழில் வாழ்க்கையில் எதிர்பாராத ஆதாயங்களைக் கொண்டு வரும். இந்த திகதிகளில் பிறந்த பெண்கள் மிகவும் தைரியமானவர்களாகவும் கணவருக்கு ஏற்றம் கொடுக்கும் வகையில் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்யும் ஆற்றல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
கடினமான சூழ்நிலைகளிலும் அவர்கள் பதற்றமடையவோ அல்லது கவலைப்படவோ மாட்டார்கள். அவர்களின் கணவர்கள் சிரமங்களை எதிர்கொள்ளும்போது, பக்கபலமாக இருப்பதால், இந்த எண்களில் பிறந்த பெண்களை திருமணம் செய்த ஆண்களுக்கு நிதி ரீதியில் ஒருபோதும் வீழ்ச்சியே கிடையாது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |