ஏமாளிகளாகவே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா?
ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, காதல், கல்வி, தொழில், விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்தவகையில் யார் எது சொன்னாலும் நம்பிவிடும் அளவுக்கு ஏமாளிகளாகவே பிறப்பெடுத்த ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மீனம்
மீன ராசியில் பிறந்தவர்கள் தங்களின் இரக்க குணத்துக்கும், கற்பனை ஆற்றலுக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இவர்களிடம் கொஞ்சமாக கண்ணீர் சிந்தி யார் எதை சொன்னாலும் உடனே நம்பிவிடுவார்கள். இவர்களின் இந்த குணம் தான் இவர்கள் எளிதில் ஏமாற்றப்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கும்.
மற்றவர்களின் துன்பங்களை கண்டுக்கொள்ளாமல் செல்பவர்களுக்கு மத்தியில் இவர்கள் கேளாமலே மற்றவர்களுக்கு உதவு குணம் கொண்டவர்களாக இருப்பதால் இவர்களை பெரும்பாலும் மற்றவர்கள் தங்களின் தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்வார்கள்.
துலாம்

துலாம் ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் மகிழ்ச்சியான சூழலை விரும்பும் குணம் கொண்டவர்களாகவும் மற்றவர்களிடம் எதற்கும் சண்டை போடாதவர்களாவும் இருப்பார்கள்.
இவர்கள் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு பிடித்த மாதிரி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
இவர்கள் ஒருவர் மீது பாசம் வைத்துவிட்டால் இவர்கள் சொல்லும் அனைத்தையும் அப்படியே நம்பிவிடுவார்கள். பொய்யே சொன்னாலும் இவர்களின் நம்பிக்கையால் அப்படி இருக்காது என்று உறுதியாக இருப்பார்கள்.
தனுசு

தனுசு ராயினர் இயல்பாகவே மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும், குடும்த்தினரை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பது போன்ற நிறைய நல்ல குணங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் ஒருவரை நம்பிவிட்டார்கள் என்றால் இறுதிவரையில் அந்த நம்பிக்கை அவர்கள் மீது வைத்திருப்பார்கள்.
யாராவது இவர்களை ஏமாற்றுகின்றார்கள் என்பதை அறிந்தால் கூட, பராவாயில்லை இவர்களின் சூழ்நிலை என்னவோ என நினைத்து மன்னித்துவி்ட்டு தங்களுக்கு தாங்களே சமாதானம் சொல்லிக்கொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |