மகளாக இருப்பதற்கு சம்பளம் கொடுத்த பெற்றோர்! அடடா இது நல்லாருக்கே
பணம் சம்பாதிப்பது என்பது அனைவருக்கும் முக்கியமான ஒன்றுதான். இருப்பினும் தொழிலின் நிமித்தம் அனேகம் பேர் மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளனர் என்பது என்னவோ உண்மைதான்.
இதே போன்று ஒரு சம்பவம்தான் சீனாவில் நடந்துள்ளது. சீனாவைச் சேர்ந்த நியானன் எனும் 40 வயதான பெண் ஒருவர், கடந்த 15 வருடங்களாக செய்தி நிறுவனமொன்றில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வருடம் அவரை அதே நிறுவனத்தில் வேறொரு பொறுப்புக்கு மாற்றியதால் மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருந்திருக்கிறார்.
இதனால் அவரால் வேலையை விடவும் முடியவில்லை தொடரவும் முடியவில்லை.
image - ndtv.com
இதனால் மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருந்த நியானனுக்கு, அவரது பெற்றோர் ஒரு அறிவுரையை வழங்கியிருந்தனர். “நீ ஏன் உன் வேலையை விட்டுவிடக்கூடாது? நாங்கள் உன்னை நிதி ரீதியில் கவனித்துக் கொள்வோம்” என்பது தான் அது.
நியானின் பெற்றோருக்கு 10,000 (இந்திய மதிப்பில் 1.17 லட்சம்) யுவானுக்கும் அதிகமான ஓய்வூதியும் கிடைக்கும் நிலையில் அதிலிருந்து 4000 யுவானை (ரூ.47,000) மாதாந்திர உதவித்தொகையாக தருவதாக கூறியுள்ளனர்.
இது நல்லதாக பட்டதால், நியானன் தனது வேலையை விட்டு விட்டு முழுநேர மகளாக பொறுப்பேற்று விட்டார்.
அதன்படி, நியானன் தினசரி காலையில் தனது பெற்றோருடன் நடனமாடுவது, கடைக்குச் செல்வது, தந்தையுடன் சேர்ந்து இரவு உணவு சமைப்பது, ட்ரைவராக இருந்து சுற்றுலா அழைத்துச் செல்வது போன்ற வேலைகளை செய்கின்றார்.
இந்த வேலை நிம்மதியளிக்கிறது என்றாலும் தனக்கு இன்னும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும் அது தனக்கு மிகப்பெரிய அழுத்தத்தை தருவதாகவும் கூறியுள்ளார்.
image - unilad
இதையறிந்த அவர்களது பெற்றோர், “உனக்கு பிடித்தமான வேலை கிடைத்தால், நீ அதற்குச் செல்லலாம்.
உனக்கு வேலை செய்ய விருப்பமில்லை என்றால், வீட்டிலேயே இரு. எங்களுடன் நேரத்தைச் செலவிடு. இப்போது போல இருக்கலாம்” என்று கூறுவதாக நியானன் கூறுகிறார்.