பாடாய்படுத்தும் மன அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டுமா? இதை மட்டும் செய்தால் போதும்
மன அழுத்தம் என்பது பொதுவாக அனைவரையும் தாக்கக்கூடிய ஒன்று.
இதுவொரு நோய் என்று கூறுவதை விட மனிதனின் மனதை ஆட்டிப்படைக்கும் ஒரு விடயம் என்று கூறலாம்.
மன அழுத்தமானது, நேர் அழுத்தம், எதிர்மறை அழுத்தம் என இரு வகைப்படும்.
இந்த மன அழுத்தமானது மனிதனை ஒருவித பதட்டத்திலும் குழப்பத்திலுமே வைத்திருக்கும்.
மன அழுத்தம் எதனால் ஏற்படுகின்றது?
மனதில் ஏற்படும் அதிகப்படியான கவலையானது மன அழுத்தமாக மாற்றமடைகின்றது. இது எதுவாகவும் இருக்கலாம். உதாரணமாக, காதல் தோல்வி, பிடித்த வேலை கிடைக்காமை. குடும்பச் சூழ்நிலையில் ஏற்படும் பிரச்சினைகள், தொழில்புரியும் இடங்களில் கொடுக்கப்படும் நெருக்கடிகள் போன்றவை மன அழுத்தத்துக்கு இழுத்துச் செல்கின்றது.
மன அழுத்தத்தை கண்டறிவதற்கான அறிகுறிகள்
- இதயத்துடிப்பு அளவுக்கு அதிகமாக இருத்தல்.
- தலைவலி ஏற்படும்.
- கூந்தல் உதிர்வு அதிகரிக்கும்.
- ஞாபக மறதி ஏற்படும்.
- எப்பொழுதும் எரிச்சலுடன் காணப்படுதல்.
- முகம் பொலிவற்று வாட்டமாக காணப்படும்.
மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான வழிகள்
- நல்ல இசை கேட்டல்.
- பிடித்த விடயங்களில் கவனத்தை செலத்துதல்.
- செல்லப் பிராணிகளுடன் நேரத்தை செலவழித்தல்.
- நெருக்கமானவர்களுடன் தமது பிரச்சினைகளை பற்றி கலந்துரையாடுதல்.
- அனைத்தும் முடியாத பட்சத்தில் மன நல மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளல்.