அடடா... என்ன அழகு... கொஞ்சும் தமிழில் அழகாக பேசும் சீனாவைச் சேர்ந்த நிலானி!
தமிழ் மொழி பேசும் சீன பெண்கள் அவ்வபொழுது தமிழக ஊடகங்களில் தலை காட்டி வருவது சமீப காலமாக அதிகரித்துள்ளது.
தமிழில் பேசுவதையே பல தமிழர்கள் தரக்குறைவாக நினைக்கும் போது, சீன மாணவியான நிலானி, தன் தமிழ் அறிவை மேம்படுத்திக்கொள்வதற்காக இந்தியா வந்திருக்கிறார். இவர் சீன வானொலி தமிழ்ப் பிரிவில் அறிவிப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
சீன வானொலி தமிழ்ப் பிரிவில் கடந்த பத்து ஆண்டுகளாக அறிவிப்பாளராகப் பணிபுரியும் நிலானி, கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் ஆறு மாதத் தமிழ் டிப்ளமோ படிப்பு படித்து வருகிறார்.
நிலானி ஒரு வீடியோ ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கொஞ்சும் தமிழில் பேசுவதைக் கேட்கும்போது நமக்கு ஆச்சர்யமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
https://www.facebook.com/watch/?v=222350366513859