தூங்கும் முன் இரவில் பெண்கள் செய்யக்கூடாத விடயங்கள்! மீறினால் ஏற்படும் விளைவுகள்
இரவில் தூங்குவதற்கு முன் பெண்கள் இதை செய்யக்கூடாது! மீறினால் ஏற்படும் விளைவுகள் பெண்கள் இரவில் தூங்க செல்லும் முன் சில செயல்களை மேற்கொள்ளக்கூடாது. அதை மீறினால் சரும பாதிப்புகள் மற்றும் முக அழகில் பாதிப்புகள் உண்டாகும்.
கூந்தல் பராமரிப்பு
சில பெண்கள் இரவில் உறங்கும்போது, கூந்தலை விரித்துப் போட்டு அதன் மேல் தூங்குவார்கள். ஆனால், இவ்வாறு தூங்கினால் உராய்வின் காரணமாக மயிர்கால்கள் வலிமையிழந்து, அதனால் பல்வேறு முடி சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும்.
ஆல்கஹால்
இரவில் உறங்கும் முன்பு மது அருந்துவது தவறான பழக்கமாகும். ஏனெனில், ஆல்கஹாலானது சரும் செல்களின் செயல்பாட்டில் பாதிப்புகளை உண்டாக்கும்.
தூங்கும் முறை
இரவில் சிலர் குப்புற படுத்து தூங்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். இதனால் சருமம் பாதிக்கப்படும். பெண்களுக்கு அதிகப்படியான அழுத்தத்தின் காரணமாக மார்பகங்கள் வடிவிழந்து தொங்க ஆரம்பித்து, சுருக்கங்களை அடையும். எனவே, நேராகவோ அல்லது இடது பக்கம் திரும்பியோ உறங்கும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும்.
ஏர் கண்டிஷனர்
எந்நேரமும் AC-யில் இருப்பவர்களுக்கு சரும் செல்கள் அதிகளவில் பாதிக்கப்படும். இரவிலும் இதனைத் தொடர்ந்தால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசை முற்றிலும் வெளியேற்றப்பட்டு, சரும வறட்சி அதிகரிக்கும். இதனால் சருமமானது முதுமை தோற்றத்தைப் பெறும்.
கைப்பேசி
இரவில் கைப்பேசியை அதிக நேரம் உபயோகித்தால், அதில் உள்ள பாக்டீரியாக்கள் முகத்தில் பருக்களை உண்டாக்கும். மேலும், கண்கள் பொலிவிழந்து கருவளையங்களுடன் காணப்படும்.