Viral Video: புடவையில் Work Out செய்யும் பெண்
தற்போது ஆண்களுக்கு நிகராக பெண்களும் ஜிம், வர்க் அவுட் என வலம் வரத் தொடங்கிவிட்டார்கள்.
முன்பை விட தற்போது பெண்கள் அதிகமாகவே தங்கள் உடல் கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.
பொதுவாகவே பெண்கள் புடவையில் இருக்கும்போது சற்று நளினத்துடனும் பவ்வியமாகவும் நடந்து கொள்வார்கள். காரணம் கேட்டால், புடவையை அணிந்துகொண்டிருப்பது கடினமாக இருக்கின்றது என்பார்கள்.
ஆனால், அதையெல்லாம் முறியடித்திருக்கிறார் புது டில்லியைச் சேர்ந்த ரீனா என்பவர். புடவையை அணிந்துகொண்டு, நீட்சி மற்றும் குந்துகைகள் பயிற்சியை தனது வர்க் அவுட்டின் ஒரு பகுதியாக செய்கின்றார்.
இந்த வீடியோ 50,000 பார்வையாளர்களைக் கடந்து சென்றுகொண்டிருக்கின்றது. இந்த வீடியோவைப் பார்த்தவர்கள், எவ்வாறு புடவையை அணிந்துகொண்டு இவரால் இந்த பயிற்சியை செய்ய முடிகின்றது என்று கேள்வியெழுப்பியுள்ளனர்.
சிலர் இது மிகவும் அருமையாக இருக்கின்றது என்று கமென்ட் செய்திருக்கும் அதேவேளை, வர்க் அவுட்டுக்கு ஏற்ற உடையை அணியாமல் இருந்தால் கடினமாக இருக்காதா? என்றும் தமது கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
புடவையுடன் ஜிம் வர்க் அவுட் செய்யும் பல வீடியோக்களை ரீனா சிங் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.