புடவையை இப்படியும் கட்டலாமே
எத்தனை விதமான நவீன ஆடைகள் வந்தாலும் நம் பாரம்பரியமான புடவைக்கு தனி மவுசு எப்போதுமே உண்டு.
அழகுக்கு அழகு சேர்க்கும் ஒரு உடை என்றால் அது புடவைதான்.
சற்று குண்டான பெண்களை ஒல்லியாகக் காட்டும் அதேசமயம் ஒல்லியான பெண்களையும் கொஞ்சம் குண்டாகக் காட்டும்.
இவ்வாறு நமது உடல் தோற்றத்தையே புடவைகள் மாற்றியமைத்துவிடும். புடவையில் பெண்கள் தேவதை போல் தெரிய வேண்டுமானால், இதையெல்லாம் பின்பற்றலாம்.... புடவை கட்டப் போகிறோம் என்றால், அதன் முந்தானை மடிப்புக்களை முன்கூட்டியே தயார் செய்துவிட வேண்டும்.
புடவைகளுக்கு ஏற்ப தரமான உள்பாவாடைகளை தெரிவு செய்தல் வேண்டும்.
புடவை கட்டும்போது கணுக்கால் வரை கட்டாமல் இரண்டு பாதங்களின் சுண்டுவிரல்களும் மறையும்படி கட்ட வேண்டும்.
உயரமான ஹீல்ஸ் அணியும் பெண்கள் ஹீல்ஸை அணிந்துகொண்டே புடவை கட்டிப் பார்க்க வேண்டும். அப்போதுதான் உயரம் சரியாக இருக்கின்றதா என்பது தெரியும்.
முந்தானை மடிப்பை பிளவுஸூடன் இணைக்கும்போது கழுத்தை இறுக்குவதுபோல் இருந்தால், முந்தானை மடிப்பின் முதல் மடிப்பை மற்றும் கொஞ்சம் தளர்வாக சற்று கீழ் இறக்கி இணைக்கலாம்.