விமானத்தில் பிரம்மாண்ட வீடு! அதுவும் நடு காட்டுக்குள்ள....எங்கு இருக்கிறது தெரியுமா?
விமானத்தையே தங்கும் விடுதியாக Airbnb நிறுவனம் மாற்றியிருக்கும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
எதேச்சையாக இணையத்தில் ஹோட்டல்களை தேடிய பெண் ஒருவர் இந்த இடத்தை கண்டதும் திகைத்துப்போயிருக்கிறார்.
இந்நிலையில், தற்போது இந்த விமான விடுதியில் தங்கியிருக்கும் அந்த பெண் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

விடுதிகளை வாடகைக்கு அளிக்கும் சேவையை வழங்கிவரும் Airbnb நிறுவனத்தின் மூலமாக Abbi என்னும் பெண் இந்த விமான விடுதியை கண்டுபிடித்திருக்கிறார்.
எங்கு அமைந்திருக்கின்றது தெரியுமா?
மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ளது கோஸ்டாரிக்கா நாடு.
கடல்கள், மழைக் காடுகள் என சுற்றுலா வாசிகளின் சொர்க்கபுரியாக திகழும் இந்த நாட்டுக்கு சுற்றுலா கிளம்பிய Abbi, தங்குவதற்கு இடத்தை தேடியிருக்கிறார்.
அப்போதுதான் இந்த விமான விடுதி பற்றி அவருக்கு தெரிய வந்திருக்கிறது.
இதனால் மிகவும் ஆச்சர்யப்பட்டுப்போன அவர் உடனடியாக இந்த விடுதியை புக் செய்திருக்கிறார்.
கோஸ்டாரிக்காவின் மானுவல் அன்டோனியோ தேசிய பூங்கா பகுதி அடர்ந்த மழைக் காடுகளை கொண்டது. இதன் நடுவே போயிங் 727 விமானத்தை விடுதியாக மாற்றியிருக்கிறார்கள்.
இதுபற்றி தனது டிக்டாக் பக்கத்தில் அவர்,"முழு உலகிலும் சிறந்த Airbnb விடுதி இதுதான்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.


