ஆடை இல்லாமல் நின்ற இளம்பெண்: நள்ளிரவில் அரங்கேறிய துயரம்
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஆண் குழந்தை வேண்டி தனது மருமகளை சூனியத்தில் ஈடுபடுத்தியதுடன் கணவரும், மாமியாரும் சேர்ந்து அந்தப் பெண்ணை நிர்வாணப்படுத்தி உடல் முழுக்க சாம்பல் பூசி கொடுமை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த பெண்ணிற்கும், அவரது கணவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளது.
ஆண் வாரிசு இல்லாததால் தனது கணவனும் மாமியாரும் குறித்த பெண்ணை அடித்து துன்புறுத்தி வந்ததும், அந்த பெண்ணை தாய் வீட்டுக்கு அனுப்பிவிட வேண்டும் என்பதற்காக பலமுறை வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் ஆண் குழந்தை குறித்த பெண்ணை மந்திரவாதி ஒருவரிடம் அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு அவரை நிர்வாணப்படுத்தி மந்திரவாதி முன்பு நிற்கவைத்து, உடல் முழுவதும் சாம்பல், குங்குமம், மஞ்சள் பூசி பூஜை நடத்தியுள்ளனர்.
மேலும் குறித்த பெண்ணிற்கு தெரியாமல் வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளதும் அம்பலமாகியுள்ளது.
தற்போது இதுகுறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.