விமானத்தில் பணிப்பெண்ணின் முகத்தில் குத்தி பற்களை உடைத்த இளம் பெண்! கொதித்தெழுந்த பார்வவையாளர்கள்
சீட் பெல்ட் அணியுமாறு கூறியதற்காக பெண் ஒருவர் விமானப் பணிப்பெண்ணை தாக்கியதில் அவருக்கு இரு பற்கள் உடைந்த சம்பவம் கடும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் விமான சேவை வழங்கி வரும் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸூக்கு சொந்தமான விமானத்தில் பயணித்த பெண் ஒருவரிடம், சீட் பெல்ட் அணியுமாறு விமானப் பணிப்பெண் கேட்டுக் கொள்கிறார்.
சாண்டியாகோ பன்னாட்டு விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க தயாராகிக்கொண்டிருந்தபோது, இந்த அறிவுறுத்தலை வழங்கினார்.
Video obtained by CBS News shows the moment a Southwest Airlines flight attendant was punched by a passenger after asking her to keep her seat belt fastened during a flight from Sacramento to San Diego Sunday. https://t.co/gQusevodYC pic.twitter.com/oOYvPdwCFj
— CBS News (@CBSNews) May 27, 2021
அதில் கோபமடைந்த பெண், திடீரென விமானப் பணிப்பெண்ணின் முகத்தில் சரமாரியாக தாக்குகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
தாடை பகுதியில் விழுந்த அடியில் பற்கள் இரண்டும் உடைந்துபோனது. இதனைப் பார்த்த சக பயணிகள் விவயன்னாவை தடுத்து அமைதியாக இருக்கையில் அமருமாறு கூறினர்.
விமானப் பணிப்பெண்ணை ஏன் அடிக்கிறீர்கள்? என்றும், அவர்களுடைய பணியை செய்வதில் என்ன தவறு? ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது உங்களின் கடமை என்றும் சக பயணிகள் சாடியுள்ளனர்.
விமானம் தரையிறங்கியபிறகு, குறித்த பெண்ணை கைது செய்த காவல்துறையினர், பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், விமானத்தில் தகராறு செய்ததற்காக கைது செய்யப்பட்டதாக விளக்கமும் அளித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த பெண் விமானப் பணிப்பெண்ணை தாக்கும் வீடியோவை இணையத்தில் பார்வையிட்ட நெட்டிசன்கள் கொந்தளித்துள்ளனர்.