ஆன்லைன் ஆர்டரில் வந்த கேக்! பிரித்து பார்த்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
பெண் ஒருவர் ஆன்லைன் மூலம் கேக் ஒன்றை ஆர்டர் செய்திருந்த நிலையில் அது வந்து சேர்ந்த விதம் வைரலாகி வருகிறது.
வைஷ்ணவி என்ற பெண் ஒருவர் இது தொடர்பாக பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் பகிர்ந்துள்ள பதிவின் படி, கேக் ஷாப் ஒன்றில் இருந்து கேக் ஒன்றை அவர் ஆர்டர் செய்துள்ளார்.
மேலும், தான் ஆர்டர் செய்த செயலியின் டெலிவரி குறிப்பில், வரும் போது 500 ரூபாய்க்கு கொண்டு வர வேண்டும் என ஆங்கிலத்தில் 'bring 500 change' என அந்த பெண் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.

பெண் ஆர்டர் செய்த கேக்கில் இருந்த வசனம்
ஆனால், சில்லறை கொண்டு வர வேண்டும் என்ற பெண்ணின் குறிப்பை பேக்கரி ஊழியர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த பெண் ஆர்டர் செய்த கேக்கின் மீது, "bring 500 change" என்ற வாக்கியம் இடம் பெற்றுள்ளது.
இது தொடர்பான புகைப்படம் தான், தற்போது நெட்டிசன்கள் மத்தியில் சிரிப்பு அலையை உண்டு பண்ணி உள்ளது.
மேலும், வைஷ்ணவி என்ற அந்த பெண், தனது கேப்ஷனில், "500 ரூபாய்க்கு சில்லறை கொண்டு வாருங்கள் என நான் டெலிவரி குறிப்பில் எழுதினேன். அவர்கள் அதனை கேக்கில் எழுதி அனுப்பி விட்டார்கள்" என குறிப்பிட்டுள்ளார்.