விழா மேடையில் கதிரை முத்தமிட்ட பெண்- யார் அவர் தெரியுமா?
பாண்டியன் ஸ்டோர்ஸில் தொடரில் கதிராகவே வாழ்ந்து வருகிறார் பிரபல நடிகரான குமரன். அந்த தொடரில் கதிர்- முல்லைக்கான ரொமான்ஸ் காட்சிகளை பார்க்க பெரிய கூட்டமே இருக்கிறது, அந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்த ஜோடி என கூறலாம். இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த பிரபல விருது வழங்கும் விழாவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் கதாபாத்திரத்தில் நடிக்கும் குமரனுக்கு Most Popular Actor விருது வழங்கப்பட்டது.
இந்த விருதை வழங்கிய தொகுப்பாளினியான டிடி எனும் திவ்யதர்ஷினி, மேடையிலேயே குமரனை முத்தமிட்டு வாழ்த்தினார். இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள குமரன், எண்ணம் போல் வாழ்க்கை, என்னுடைய நெருங்கிய தோழியின் கையால் இந்த விருதை பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த விருதை என்னுடைய ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு சமர்ப்பணம் செய்கின்றேன் என தெரிவித்துள்ளார்.