பாம்பு குட்டிகளை பிரசவித்த பெண்? உண்மையில் என்ன நடந்தது
சத்தர்பூர் (மத்தியப் பிரதேசம்): மத்தியப் பிரதேசத்தின் மௌ மசானியா கிராமத்தில் நடந்த ஒரு வினோதமான சம்பவம் தற்போது இணையத்தில் காட்டு தீயாய் பரவி வருகின்றது.
குறித்த கிராமத்தில் வசிக்கும் பெண்ணான ரிங்கி அஹிர்வார், தான் பாம்புகளைப் பெற்றெடுத்ததாகக் கூறியுள்ளமை கிராம மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.
இரண்டு பாம்புக் குட்டிகள்
ஹல்கே அஹிர்வார் என்ற நபரின் மனைவியான ரிங்கிக்கு ஒரு நாள் திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனை தொடர்ந்து சிறிது நேரத்திலேயே, தனக்கு இரண்டு பாம்புக் குட்டிகள் பிறந்ததாக அவர் கூறியுள்ளார்.
அதனையறிந்த கிராம மக்கள் பதற்றமடைந்து அவரது வீட்டிற்கு விரைந்தனர், அங்கு "பாம்புக் குட்டிகள்" என்று அழைக்கப்பட்டவை ஒரு பிளாஸ்டிக் கிண்ணத்திற்குள் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் இது குறித்த விசாரிக்கையில், "ரிங்கிக்கு மாதவிடாய் சமீபத்தில் நின்றுவிட்டதாகவும், ஆனால் கடந்த திங்கட்கிழமை மீண்டும் தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார். முழுமையான பரிசோதனையில், அவர் கர்ப்பமாக இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது," என்று அவர் மேலும் கூறினார்.
உண்மை என்ன?
ரிங்கி பாம்புகள் என்று தவறாகக் கருதியது உண்மையில் இரத்தக் கட்டிகள் என்பதை டாக்டர் சதுர்வேதி குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டிகள் சில நேரங்களில் நீண்ட, மெல்லிய மற்றும் நூல் போன்ற இழைகளாகத் தோன்றும், வடிவத்தில் பாம்புகளைப் போன்றவை.
சில மருத்துவ நிலைகளில் இத்தகைய கட்டிகள் பொதுவானவை என்றும், அவை தானாகவே கரைந்துவிடும் என்றும் மருத்துவர் மேலும் விளக்கினார்.
இவ்வாறான அசாசாரண சம்பவங்களை எதிர்கொள்ளும் சமயங்களில், அறிவியல் உண்மைகள் மற்றும் மருத்துவ நிபுணத்துவத்தை நம்புவதன் முக்கியத்துவத்தை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது.
கட்டுக்கதைகள் மற்றும் தவறான கருத்துக்களால் ஏற்படும் பீதியைத் தடுக்க கிராமப்புறங்களில் அதிக விழிப்புணர்வு மற்றும் கல்வியின் அவசியத்தையும் இது எடுத்துக்காட்டுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான விடயங்கள் விரைவாக பரவி, உள்ளூர்வாசிகள் மட்டுமல்லாது தற்போது சமூக ஊடகங்களிலும் பரவி இணையத்தில் பெரும்பாலான நபர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
#WATCH | #Chhatarpur Woman Gives Birth To Snakes? District Hospital Doctor Clarifies#MadhyaPradesh #MPNews #snakes pic.twitter.com/j0dq88ppFg
— Free Press Madhya Pradesh (@FreePressMP) August 7, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |