இந்த தவறுகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.. குடலுக்கு ரொம்ப கேடு
பொதுவாக நாம் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காக உடற்பயிற்சி செய்வது வழக்கம்.
ஆனால் உடற்பயிற்சி மாத்திரம் இருந்தால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியாது. மாறாக ஆரோக்கியமான பழக்கவழக்கங்களும் அவசியம்.
இதன்படி, உடற்பயிற்சியை ஆரம்பிக்கும் முன் வெறும் வயிற்றில் செய்வதை விட, ஊட்டச்சத்துக்கள் கலந்த சமச்சீர் உணவை உட்கொள்வது வழக்கமாக இருக்கும் செயல்திறனை விட அதிகப்படுத்தும்.
அந்த வகையில், உடற்பயிற்சி செய்வதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பாக வாழைப்பழம் அல்லது ஆப்பிள் சாப்பிடலாம். இது போன்ற பழங்கள் உடலுக்கு போதிய ஊக்கம் கொடுத்து சோர்வில்லாமல் பயிற்சிகளை செய்ய உதவியாக இருக்கும்.
தொடர்ந்து உடற்பயிற்சிகளில் ஈடுபவர்கள் சில விடயங்களை தவிர்க்க வேண்டும். ஏனெனின் அந்த பழக்கங்களினால் உடலுக்குள் செல்லும் இரசாயனங்கள் குடல் ஆரோக்கியத்தை மோசமாக்கும்.
அந்த வகையில், உடற்பயிற்சி செய்பவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பழக்கங்கள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
நான்ஸ்டிக் பாத்திரங்களின் பயன்பாடு
தற்போது வளர்ந்து வரும் நவீன மாற்றங்களால் வீட்டில் உள்ள பாத்திரங்கள் கூட மாற்றமடைந்துள்ளன. வழக்கமாக சமையலுக்கு நான்ஸ்டிக் பாத்திரங்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது. இதில் உள்ள பெயிண்ட் மோசமான ரசாயனமாகும். தொடர்ந்து நான்ஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்தினால் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஏனெனின் இது போன்ற பாத்திரங்களில் டெஃப்ளான் (PTFE) என்ற பொருள் பூசப்பட்டுள்ளது. இது சமைக்கும்போது கீறப்படுவதாலும், சமைக்கும்போது அதிக வெப்பத்திலும் தீங்கு செய்யும் சேர்மங்களை வெளியிடுகிறது. இது நம்முடைய உணவுடன் கலந்து நோய்களை ஏற்படுத்தும். ஆகவே ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் நான்ஸ்டிக் இல்லாமல், பீங்கான், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், வார்ப்பிரும்பு சமையல் பாத்திரங்களை பயன்படுத்தலாம்.
சர்க்கரை சாப்பிடுதல்
அன்றாட வாழ்வில் வெள்ளை சர்க்கரையை குறைக்க வேண்டும். இனிப்புக்களை அதிகம் எடுத்துக் கொள்ளும் நபராக இருந்தால் செயற்கை இனிப்புகள் குடல் பாக்டீரியா, இரத்த சர்க்கரை மற்றும் பசியின்மை ஆகிய பிரச்சினைகள் வரலாம். இனிப்பு உணவுகளை உண்ணத் தோன்றும் போது பழங்கள் உண்ணலாம்.
பிளாஸ்டிக் பாவனை
பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஏனெனின் பிளாஸ்டிக் பாட்டிலில் உள்ள பிஸ்பெனால் ஏ (பிபிஏ) மாதிரியான இரசாயனங்கள் பிபிஏ இல்லாத பிளாஸ்டிக் பொருள்களிலும் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படுத்தும். ஸ்டீல் அல்லது கண்ணாடி தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்தும் பொழுது உடலில் ஏற்படும் கோளாறுகள் குறையும்.