விவாகரத்து பெற்ற நாளை சுதந்திர நாளாக கொண்டாடும் இளம் பெண்! இது தான் காரணமாம்..
நான்காவது விவாகரத்து தினத்தை கொண்டாடிய பெண்ணின் டுவிட்டர் பதிவு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்ளும் உறவுகள்
தற்காலத்தில் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு திருமணம் எவ்வளவு சிம்பலான விடயமோ அந்தளவும் விவாகரத்தும் இலகுவான விடயமாக தான் பார்க்கிறார்கள்.
மேலும் தேவைப்படும் திருமணம் செய்துக் கொள்வார். அது தொடர்பில் கேட்டால் காதலுக்கு மனம் இருந்தால் போதும் என்பார்கள். ஆனால் அதே மனத்தை சுமார் சில வருடங்களில் அல்லது நாட்களில் முடித்துக் கொள்வார்கள்.
திருமணம் முடிந்து பெரியவர்களின் ஆசீர்வாதத்துடன் ஏற்படுத்திக் கொள்ளும் உறவு நம்மை விட்டு பிரியும் போது மன வறுத்தம் ஏற்படும். ஆனால் சிலர் அதனை கொண்டாடி வருகிறார்.
இதன்படி, பெங்களூரைச் சேர்ந்த சாஸ்வதி சிவா என்ற பெண்ணே இவ்வாறு தன்னுடைய திருமண வாழக்கை முடிவுற்றதை நான்கு வருடங்களாக கொண்டாடி வருகிறார்.
விவாகரத்து நாளை கொண்டாடிய பெண்
மேலும் தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து கவலைபட வேண்டியது இல்லை. எனக்கும் அப்படி தான் விவாகரத்திற்கு பின்னர் தான் என்னுடைய வாழ்க்கை நான் உணர்ந்து பல சாதனைகளை செய்துள்ளேன்.
என்னை பொருத்தமட்டில் விவாகரத்து நாள் என்பது எனக்கு சுதந்திரம் கிடைத்த நாள், இது போன்று எனக்கு வாழ் நாளில் கிடைக்குமா என எதிர்பார்த்துக் காத்திருந்தேன் எனவும் சாஸ்வதி சிவா கூறியிருக்கிறார்.
இதனை பார்க்கும் போது இவர் அவருடைய திருமணம் வாழ்க்கையில் மிகவும் அடிப்பட்டு தனக்கான சுதந்திரத்தை பெற்றுள்ளார் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேலும் இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த நெட்டிசன்கள், “ எனக்கான சுதந்திர நாள் இன்னும் வரவில்லை என்றும், நீங்கள் சரி சந்தோஷமாக இருங்கள் என கவலையாக இருக்கும் படி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
இதற்கு சாஸ்வதி சிவாவும் இது உங்கள் கையில் தான் இருக்கிறது என ஆதரவான ரிப்ளேக்களை கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
4 years of freedom, and not taking it for granted for a single day. Celebrating a divorce-versary today. ?
— Shasvathi Siva (@shasvathi) January 23, 2023
Happy happies to me!!! pic.twitter.com/fxcp5MFScb