விவாகரத்து சர்ச்சைக்கு பின் காதலர் தினத்தில் ஐஸ்வர்யா செய்த தரமான சம்பவம்.... அனிருத்தின் அதிரடி என்ட்ரி!
விவாகரத்து அறிவிப்பிற்கு பிறகு தனது வழக்கமான பணிகளுக்கு திரும்பிய ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பம் இயக்கும் வேளைகளில் இறங்கினார்.
இதற்காக ஐதராபாத்தில் தங்கி பணிகளில் ஈடுபட்டு வந்தார். காதலர் தினத்தை முன்னிட்டு ரொமாண்டிக் பாடல் ஒன்றை தயாரிக்கும் பணிகளில் இறங்கினார் ஐஸ்வர்யா.
இந்நிலையில் இந்த பாடலின் புரோமோ வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அன்கித் திவாரி இசையமைத்துள்ள 'முசாபிர்' பாடல் பல மொழிகளில் தயாராகியுள்ளது. இந்த பாடலை தெலுங்கில் சாகரும், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்தும், தமிழில் அனிருத்தும் பாடுகின்றனர்.
இதன் முழு வீடியோ விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் ஐஸ்வர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.