மழை காலத்தில் நண்டு சாப்பிடலாமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக கடல் உணவுகள் என்றால் அசைவ பிரியர்களுக்கு அதிகம் பிடித்த ஒன்றே. அதிலும் கடல் உணவில் ஒன்றான நண்டை சாப்பிடாதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள்.
ருசியான சுவை மட்டுமின்றி, நண்டு சாப்பிடுவது ஆரோக்கியமானது. நண்டுகளில் பல முக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நண்டு சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் உள்ள நிலையில், அவை என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
நண்டு சாப்பிடுவதால் நன்மைகள்
நண்டில் குறைந்த கொழுப்பும், ஆரோக்கியமான புரதத்தின் மூலம் இருக்கின்றது. இவை ஆற்றலை வழங்குவதுடன், வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கின்றது.
நண்டில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், துத்தநாகம் புரதம் காணப்படுவதால் மாரடைப்பு அபாயத்தை குறைக்கின்றது.
மூளையின் ஆரோக்கியம், வளர்ச்சியை பாதிக்கும் பிற காரணிகளுக்கு எதிராக நண்டுகள் பாதுகாக்க உதவுகின்றன.
நண்டில் நிறைந்திருக்கும் பாஸ்பரஸ் பற்கள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்தவும் உதவி செய்கின்றது.
நண்டில் இருக்கும் செலினியம் சரியான தைராய்டு செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
நண்டு சாப்பிடுவதால் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி மேம்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |