குளிர் காலத்தில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா? தெரிந்து கொள்ள வேண்டிய விடயம்
பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்த வாழைப்பழத்தினை குளிர் காலத்தில் எடுத்துக் கொள்ளலாமா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வாழைப்பழம்
வாழைப்பழம் தமிழர்களின் உணவு பழக்க வழக்கங்களில் பல ஆண்டு காலமாக தொடர்ந்து வரும் ஒன்று. வாழை மரத்தில் வாழைத்தண்டு, வாழைக்காய், வாழைப்பூ, பழம் என அனைத்தையும் மருத்துவம், உணவு இரண்டிலும் பயன்படுத்தப்படுகின்றது.
ஒரு மீடியம் அளவு வாழைப்பழத்தில் 105 கலோரிகள், 27 கிராம் மாவுச்சத்து, 14 கிராம் சர்க்கரை சத்து, 5 கிராம் நார்ச்சத்து, 422 மில்லி கிராம் பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. இது தவிர விட்டமின் சி, விட்டமின் பி6, மெக்னீசியம், சோடியம் ஆகிய சத்துக்களும் உள்ளன.
வாழைப்பழம் சாப்பிடுவதால் செரிமானம் மேம்படுவதுடன், உயர் ரத்த அழுத்தத்தையும் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது.
எலும்புகள் வலுவடைவதுடன், வயிறு பிரச்சினை, மலச்சிக்கள் தடுக்கப்படுகின்றது. தசைகளை சீரடையவும் செய்கின்றது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வாழைப்பழத்தை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
குளிர் காலத்தில் வாழைப்பழம் சாப்பிடலாமா?
வாழைப்பழத்தை தினசரி சாப்பிடுவதில் எந்தவொரு சிக்கலும் இருப்பதில்லை. பொட்டாசியம் சத்தை தவிர்க்க வேண்டும் என்ற நபர்கள், வாழைப்பழத்தை சாப்பிடுவதை தவிர்க்கவும். இதே போன்று ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பவர்களும் தவிர்க்கலாம்.
இரவு நேரத்தில் குளிர்காலத்தில் வாழைப்பழம் சாப்பிடுவது பாதுகாப்பு அற்றது என்று கூற முடியாது. ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும் என்பதால் இரவில் தாமதமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
சர்க்கரை அளவு அதிகரிக்கும் நினைப்பவர்களுக்கு ஒரு பல்கலைக்கழக ஆய்வு நல்ல தகவலை வெளியிட்டுள்ளது. வாழைப்பழத்தில் உள்ள மாவுச்சத்து மற்றும் ஸ்டார்ச் சத்து ஆகியவை நார்ச்சத்தை போலவே சர்க்கரை எதிர்ப்புத்தன்மை கொண்டவை என்றும், இதை சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை துரிதமாக அதிகரிக்காது என்றும் கூறப்படுகின்றது.
வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் மிக முக்கியமான எலெக்ட்ரோலைட் சத்தாக உள்ளது. இது நம்முடைய தசை இயக்கம் மற்றும் இதய நலன் ஆகியவற்றுக்கு மிக முக்கியமாகும்.
வாழைப்பழம் நல்லது என்றாலும், தினசரி அந்த பழத்தையே சாப்பிடுவதைக் காட்டிலும், வெவ்வேறு வகையான காய்கறிகள் மற்றும் பழங்களை சுழற்சி முறையில் எடுத்துக் கொள்வது நல்லது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |