குளிர் காலத்தில் தயிர் சாப்பிடலாமா? சந்தேகத்திற்கு பதில் இதோ
குளிர் காலம் ஆரம்பித்துவிட்டால், சளி, இருமல், காய்ச்சல் என பல பிரச்சினைகள் வந்து தொல்லை கொடுத்துவிடும். அந்த வகையில் இந்நேரத்தில் சூடான உணவுகளை சாப்பிடவே மருத்துவர்கள் ஆலோசனை கூறுவார்கள். ஆனால் குளிர்ச்சியான பொருளில் ஒன்றான தயிரை குளிர்காலத்தில் சாப்பிடலாமா என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
குறிப்பாக பனி மற்றும் குளிர் காற்றில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வது மிகவும் அவசியம். சீசன் மாறும் போதெல்லாம் சாப்பிடும் உணவு விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.
தற்போது தயிர் சாப்பிட்டால் சளி, காய்ச்சல், தொண்டை வலி ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ள நிலையில், தற்போது அதன் உண்மை குறித்து தெரிந்து கொள்வோம்.
தயிரின் சத்துக்கள்
தயிர் கெட்ட பாக்டீரியாக்களை நீக்கி நல்ல பாக்டீரியாக்களை அதிகப்படுத்துகிறது. இதில் பல வைட்டமின்கள், புரதங்கள், மெக்னீசியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் பி12, பாஸ்பரஸ் உள்ளது.
தயிர் சாப்பிடலாமா?
ஆயுர்வேதத்தின்படி தயிரை குளிர்காலத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டுமாம். சளி சுரப்பு மற்றும் பிற சுரப்பிகளின் சுரப்பை அதிகரிப்பதுடன், சைனஸ், ஆஸ்துமா, சளி, இருமல், தொண்டை வலி, காய்ச்சல் உள்ளவர்கள் தவிர்கக வேண்டும். குறிப்பாக இரவில் சாப்பிடக்கூடாது.
ஆனால் அறிவியல் படி, தயிரில் குடலுக்குத் தேவையான நல்ல பாக்டீரியாக்கள் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதுடன், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சுவாசக் கோளாறு உள்ளவர்கள் மாலை 5 மணிக்கு மேல் தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.
ஆனால் தயிரில் வைட்டமின் சி இருப்பதால், சளியால் அவதிப்படுபவர்களுக்கு உதவுகிறது என்றும், தயிரை அறை வெப்பநிலையில் வைத்து சாப்பிடுவது நல்லது என்றும் சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதன்படி தயிரை குளிர்காலங்களில் எடுத்துக்கொள்ளாமல் இருப்பதை விட குறைந்த அளவு சாப்பிடலாம்.குளிர்சாதன பெட்டியில் வைக்கும் தயிரை விட அறைவெப்பநிலையலி் உள்ள தயிரை சாப்பிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |