மதுரை நகைக்கடை கொள்ளையன் நிஷாந்த் கைது... எங்கே பதுங்கியிருந்தார்?
Madurai Robbery Nishanth Arrest: மதுரையில் பிரபல நகைக்கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நிஷாந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.
நகைக்கடையில் நடந்த கொள்ளை
மதுரை காளவாசல் பகுதியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில் கடந்த 12ம் தேதி கிலோ கணக்கில் நகைகள் கொள்ளை போனது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய நிலையில், கும்பலாக வந்து கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்று யோசித்த நிலையில் கடைசியாக ஒரே ஒரு இளைஞர் மட்டும் தான் இந்த சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது தெரியவந்துள்ளது.
குறித்த காரியத்தினை செய்வதற்கு ஒரு மாதமாக நிஷாந்த் கடைக்கு வந்து பல இடங்களை நோட்டமிட்டு வைத்ததுடன், நகைகளையும் தெரிவு செய்து வைத்துள்ளார்.

மேலும் ஒவ்வொரு முறையும் வரும்போது தனது கெட்டப்பினை மாற்றி வந்ததை வைத்தே கண்டறிந்துள்ளனர்.
ஆட்டோவில் வந்து நிஷாந்த் கொள்ளையடித்த போது அணிந்திருந்த ஆடையை தீவைத்து எரித்ததை பார்த்த நபர் ஒருவர் தகவல் கொடுத்த நிலையில், கடைசியாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் நிஷாந்த் என்பது உறுதியானது.
அதுமட்டுமின்றி கொள்ளையடித்த நிஷாந்தின் தோழியும், பிரபல இன்ஸ்டா இன்ஃபுளூயன்சருமான மீனாட்சியும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார்.

அதாவது நிஷாந்த் சென்ற ஸ்கூட்டர் மீனாட்சியுடையது என்பதை கண்டறிந்தனர். இந்நிலையில் மீனாட்சி மற்றும் நிஷாந்தின் தந்தை சுரேஷை கைது செய்த போலிசார் இவர்களிடமிருந்த நகைகளையும் கைப்பற்றினர்.
அதுமட்டுமின்றி மாடக்குளம் பகுதியில் உள்ள செடிகள் நிறைந்த இடத்தில் மேலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த நகையை மீனாட்சி மூலமாக போலிசார் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் நிஷாந்த் தருமபுரி மாவட்டத்தில் சேஷம்பட்டி பகுதியில் பதுங்கியிருந்த நிலையில், இன்று போலிசார் கைது செய்துள்ளனர்.

அவரை மதுரைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்றைய தினத்தில் மீனாட்சியின் தாய் மற்றும் அவரது உறவினர் ஒருவர் மீனாட்சியை போலிசார் அழைத்துச் செல்லும் ஆறுதலாக பேசியிருந்த காட்சியும் வெளியானது.
அதாவது எதையும் மறைக்காமல் என்ன நடந்ததோ அழகாமல் நீதிபதியிடம் கூறிவிடு... கவலைப்படாத நாங்க இருக்கோம்... நாங்க பார்த்துக்கிறோம்... என்று ஆறுதல் கூறியுள்ளனர்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |