பாதி வெட்டிய எலுமிச்சையையும் நீண்ட நாட்கள் பாதுகாக்கலாம் - இதோ எளிய வழிகள்!
How to make lemons stay fresh longer: பொதுவாகவே அன்றாட வாழ்க்கையில், சமையல் முதல் பானங்கள் தயாரிப்பது வரை எலுமிச்சை பல வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், வாங்கிய எலுமிச்சையைச் சரியாகச் சேமிக்காவிட்டால் சில தினங்களிலேயே உலர்ந்து பழத்தில் உள்ள சாறு குறைந்துவிடும்.
குறிப்பாக, பாதியாக வெட்டிய எலுமிச்சையைப் பாதுகாப்பது பலருக்கும் சிரமமாக இருக்கும். எனவே, எலுமிச்சையை நீண்ட நாட்கள் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும் சில எளிய வழிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

முழு எலுமிச்சையை எப்படிச் சேமிப்பது?
எலுமிச்சையை அறை வெப்பநிலையில் வைத்திருந்தால் சுமார் ஒரு வாரத்தில் உலரத் தொடங்கலாம். அதனால், நீண்ட நாட்கள் பயன்படுத்துவதற்கு அவற்றைக் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது நல்லது.
எலுமிச்சையை நேரடியாகக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்காமல், காற்றுப் புகாத மூடியுள்ள கொள்கலனில் போட்டு வைப்பது அவசியம்.இதனால் அதன் ஈரப்பதம் தக்கவைக்கப்பட்டு, பழங்கள் விரைவில் உலர்வது தடுக்கப்படும்.
பச்சையாக இருக்கும் எலுமிச்சையைச் சிறிது நேரம் வெளியில் வைத்திருக்கலாம். அவை மஞ்சள் நிறமாக மாறியதும் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது நல்லது.

பாதியாக வெட்டிய எலுமிச்சையை எப்படிப் பாதுகாப்பது?
சமையலுக்காக எலுமிச்சையைப் பாதியாக வெட்டிய பிறகு, மீதமுள்ள பகுதியை அப்படியே வைத்திருந்தால் விரைவில் உலர்ந்துவிடும். இதனைத் தவிர்க்க, வெட்டிய பகுதியை பிளாஸ்டிக் உறையால் நன்றாகச் சுற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம்.
அல்லது சிறிய மூடியுள்ள பாத்திரத்தில் வைத்தும் பாதுகாக்கலாம். இவ்வாறு சேமித்த எலுமிச்சையைச் சில நாட்களுக்குள் பயன்படுத்துவது சிறந்தது.

எலுமிச்சைச் சாற்றை எப்படிச் சேமிப்பது?
எலுமிச்சையை முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலையில், அதன் சாற்றைப் பிழிந்து சேமித்து வைக்கலாம். இதற்காக, சாற்றைச் சுத்தமான மூடியுள்ள பாத்திரத்தில் ஊற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும்.இதன் மூலம் சில நாட்களுக்குச் சாற்றைப் பயன்படுத்த முடியும்.
நீண்ட நாட்கள் பயன்படுத்த எளிய வழி எலுமிச்சைச் சாற்றை நீண்ட காலத்திற்குப் பாதுகாக்க விரும்பினால், அதை ஐஸ் கட்டிகளாக உறைய வைக்கலாம். முதலில், சாற்றை ஐஸ் கட்டித் தட்டுகளில் ஊற்றி ஃப்ரீசரில் வைக்க வேண்டும்.நன்றாக உறைந்ததும் அவற்றை எடுத்து மூடியுள்ள கொள்கலனில் சேமிக்கலாம்.

தேவைப்படும் நேரத்தில் இந்தச் சாறு கட்டிகளை எடுத்துப் பயன்படுத்தலாம். இதனால் ஒவ்வொரு முறையும் எலுமிச்சையை வெட்டிச் சாறு பிழைக்க வேண்டிய அவசியமில்லை.
சிறிய சேமிப்பு முறைகளைக் கடைப்பிடித்தாலே எலுமிச்சையை வீணாக்காமல், அதன் சுவையையும் புத்துணர்ச்சியையும் நீண்ட நாட்கள் தக்கவைத்துக்கொள்ளல முடியும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |