குளிர் காலத்தில் தினமும் தயிர் சாப்பிடலாமா? பலரது கேள்விக்கு பதில் இதோ
குளிர்காலம் வந்துவிட்டாலே ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவுகளை சாப்பிடுவதில் நாம் அதிக முக்கியத்தும் கொடுப்பதுண்டு. ஆனால் தயிர் குளிர் காலத்தில் சாப்பிடலாமா என்ற கேள்விக்கு பதிலை இங்கு தெரிந்து கொள்வோம்.
குளிர்காலத்தில் தயிர் எடுத்துக்கொள்ளலாமா?
அதிக அளவு கால்சியம், மெக்னீசியம், புரதச்சத்து மற்றும் பொட்டாசியம் கொண்ட தயிரானது குளிர் காலத்தில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். ஆனால் தயிர் குடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கின்றது.
ஜெனி அனுப்பிய விவாகரத்து நோட்டீஸ்... அமிர்தாவிற்கு நெருக்கடி கொடுக்கும் கணேஷ்! பரிதவிப்பில் பாக்கியா
ஒருவரின் உடம்பிற்கு ஏற்ப தயிரை எடுத்துக்கொள்ளலாம். அதாவது குளிர் காலத்தில் காற்று குளிர்ந்து காணப்படுவதால் உடம்பில் அழுத்தம் ஏற்படுகின்றது. குறிப்பாக செரிமான அமைப்பிலும் அழுத்தம் ஏற்படுதால், வயிறு சம்பந்தமாக பிரச்சினை ஏற்படலாம்.
நமது நோய் எதிர்ப்பு அமைப்புக்கு கூடுதல் பலனை அளிக்கும் தயிர், குளிர் காலத்தில் நம்மை நீரேற்றமாக வைத்திருப்பதற்கு உதவுகின்றது. குளிர்காலத்தில் நாம் குறைந்த அளவே தண்ணீர் பருகுவதால், நீர்ச்சத்து பிரச்சினை ஏற்படும். இத்தருணத்தில் தயிரை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
எனவே குளிர் காலத்தில் தயிர் எடுத்துக் கொள்வதில் எந்தவொரு சிக்கலும் இல்லை. சுவாச கோளாறு உள்ளவர்கள் மாலை 5 மணிக்கு பின்பு தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
சளி பிடிக்கும் என்றால், உங்களது உணவுகளில் வெதுவெதுப்பான உணவுகளை சேர்த்துக் கொள்வது நல்லது. அளவுக்கு அதிகமாக ரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகமாக இருக்கிறது. இவர்கள் வழக்கமான முறையில் தயிர் சாப்பிட்டு வரும்பொழுது ரத்த அழுத்தம் குறைகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |