தந்தைக்கு தெரியாமல் செழியன் ஜெனியை சேர்த்து வைத்த எழில்... நீதிமன்றத்தில் நடக்கவிருப்பது என்ன?
பாக்கியலட்சுமி சீரியலில் செழியனை ஜெனியுடன் எழில் அனுப்பி வைத்துள்ள நிலையில், நீதிமன்றத்தில் ஜெனி தந்தை என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்துள்ளார்.
ராதிகா பாக்கியாவிற்கு ஆறுதலாக இருந்து வருகின்றார். ஆனாலும் பாக்கியா அடுத்தடுத்து பிரச்சினையை சந்தித்து வரும் நிலையில், தனது தொழிலில் அடுத்தடுத்த இடத்திற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் செழியன் மற்றும் ஜெனியின் விவாகரத்து பிரச்சினை நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. அவர்களை விசாரிக்க அழைத்த நீதிபதி முன்பு ஜெனியிடம் செழியன் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார்.
பின்பு தந்தையுடன் வெளியே வந்த ஜெனி காரில் இருக்கின்றார். அவரது தந்தை வழக்கறிஞரை பார்க்க சென்றுள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்தி எழில், செழியனை அழைத்து ஜெனி அமர்ந்திருக்கும் காரில் அமர வைத்து, காரை எடுத்துக் கொண்டு செல்ல நிலையில், செழியன் மன்னிப்பு கேட்டு கதறி அழுதுள்ளார். செழியனின் கதறலுக்கு ஜெனி காது கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |