Headset அதிகமாக பயன்படுத்தினால் காது வலிக்குமா?
பொதுவாக தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக Headset மற்றும் தொலைபேசி இல்லாமல் யாரையும் பார்க்க முடியாது.
மனிதர்களை பழகுவதை மறந்து மனிதர்கள் தொலைபேசி மற்றும் Headset உடன் இருப்பதை பழக்கப்படுத்திக் கொள்கிறார்கள்.
இரவு முழுவதும் காதில் Headset அணிந்து கொண்டு தூங்கும் பழக்கம் நம்மிள் பலருக்கு இருக்கிறது. இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் அதிகமாக இருந்தாலும், Headset பயன்படுத்தும் பழக்கத்தை விட முடியாமல் தொடர்வார்கள்.
இப்படி தொடரும் பொழுது ஒரு கட்டத்தில் காது வலிக்க ஆரம்பிக்கும். காதுவுடன் தலையும் வலிக்க ஆரம்பிக்கும். அப்போது நீங்கள் பாவனையை குறைக்காமல் இருந்தால் பின் விளைவுகள் மோசமாக இருக்கும்.
அந்தவகையில், அதிகமான நேரம் Headset அணிபவர்களுக்கு ஏன் காது வலி வருகிறது என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

Headset பாவனையின் பக்க விளைவு
1. Headset அல்லது earbuds காதுகளுக்கு உள்ளே அதிகமான நேரம் இருக்கும் பொழுது ஒரு வகையான அழுத்தம் ஏற்பட்டு, அந்த பகுதியில் இரத்த ஓட்ட குறைய வாய்ப்பு உள்ளது. இதனால் உங்களுக்கு காதுகளில் வலி, அரிப்பு, அல்லது வீக்கம் வரலாம்.
2. Headset அணிந்து அதிகமான ஒலி பாடல்கள் கேட்கும் சமயத்தில் காதின் உள்ளே உள்ள நுண்ணிய செல் சேதமடையும். இதனை பொருட்படுத்தாமல் நீண்ட நேரம் பயன்படுத்தினால் காதில் உள்ளே இருந்து மொய் என ஒரு சத்தம் வரும் வாய்ப்பு உள்ளது.

3. நீங்கள் பயன்படுத்தும் Earphones-ஐ அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனின் அதிலுள்ள பாக்டீரியா காதில் உள்ளே சென்று infection-ஐ ஏற்படுத்தும். அந்த சமயத்திலும் வலி ஏற்படும்.
4. காதை கவர் செய்யும் வகையில் headsets அணியும் பொழுது, காதில் உள்ளே காற்று உள்ளே செல்லாது. இதனால் ear canal ஈரப்பதம் இல்லாமல் வலிக்க ஆரம்பிக்கும்.
சரிச் செய்வது எப்படி?

- உங்களுக்கு Headset அணிந்து தான் அவசியம் இருக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு 30-45 நிமிடத்துக்கு அகற்றி காதுகளுக்கு ஓய்வு கொடுப்பது சிறந்தது.
- Headset Volume 60%- க்கும் அதிகமாகாமல் ஒரு அளவுடன் வைத்து பயன்படுத்தினால் காது வலி இருக்காது.
- நீங்கள் பயன்படுத்தும் Earphones-ஐ தினமும் சுத்தம் செய்வது அவசியம். ஏனெனின் அதற்குள்ளும் பாக்டீரியாக்களின் தாக்கம் இருக்கும்.
- மேற்குறிப்பிட்ட அனைத்தையும் செய்து உங்களுக்கு காது வலி அதிகமாக இருந்தால் ENT மருத்துவரை அணுகுவது சிறந்தது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |