பச்சை மிளகாய் சாப்பிட்டால் எடை குறையுமா? இத்தனை நோய்களுக்கு மருந்தாகும் மிளகாய்
நாம் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களிலும் ஒவ்வொரு ஆரோக்கியப் பண்புகள் நிறைந்திருக்கிறது.
அதிலும் பொதுவாக பச்சை மிளகாய் காரமாக இருப்பதால் அவற்றை தினமும் உணவில் இருந்து ஒதுக்கி இறுதியில் குப்பையில் தான் போடுவோம்.
ஆனால் இந்தப் பச்சை மிளகாயில் பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச் சத்து, வைட்டமின் பி6, வைட்டமின் ஏ, போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கிறது.
இத்தனை சத்துக்களையும் கொண்ட பச்சை மிளகாய் பல நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
பச்சை மிளகாயின் மருத்துவம்
பச்சை மிளகாயில் ஆண்டி ஆக்ஸிடண்ட் அதிகம் நிறைந்துள்ளது இது உடலில் புற்றுநோய் செல்களை ஆரம்பத்திலே அழிக்கும் வல்லமைக் கொண்டது.
15 கிராம் பச்சைமிளகாயில் 6 கலோரிகள் தான் இருக்கிறது அது உங்கள் உடலில் இருக்கும் கொழுப்பைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கிறது.
பச்சைமிளகாயில் இருக்கும் சிலிக்கான் தலைமுடியின் வளர்ச்சிக்கு அதிகம் உதவுகிறது. அதாவது தலைமுடியின் வளர்ச்சிக்கு தூண்டும் பாஸிக்கிஸ்லை பாதுகாத்து வைக்கிறது.
மேலும், பச்சை மிளகாயானது சருமத்திற்கு தேவையான எண்ணெய் தன்மையை உருவாக்குகிறது. இது முகப்பருக்கள், தோல் அலர்ச்சி, தோல் சுருக்கம் போன்ற பிரச்சினைகளை குணப்படுத்தும்.
பச்சை மிளகாயில் காப்சைசின் இருப்பதால் அது சளி மற்றும் இருமல் பிரச்சினைகளை குணப்படுத்த உதவுகிறது. இந்த காப்சைசின் மெட்டாபாலிசத்தை அதிகரிக்கிறது. இது பசியைக் குறைத்து எடையைக் குறைக்கிறது.
ஒரு பச்சை மிளகாயில் 1 கலோரிதான் இருக்கிறது, இந்த ஒரு ஒரு கலோரியில் புரதச்சத்து, கொழுப்புச்சத்து, கார்போஹைட்ரேட், நார்சத்து போன்றவை இருக்கிறது.
பச்சைமிளகாயில் இரும்புச்சத்து இயற்கையாகவே இருக்கிறது அதனால் உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இது இரத்த சக்கரை அளவை சீராக வைக்கிறது.
பச்சை மிளகாய் எண்டோர்ஃபின் ஹார்மோனை சுரக்க வைப்பதால் உங்களை எப்போதும் உற்சாகமாக வைக்கிறது.