பால் நல்லது தான்.. ஆனால் இந்த பாதிப்புகளும் இருக்கு! உங்களுக்கு தெரியுமா?
கால்சியம் , சோடியம் , புரோட்டீன் வைட்டமின் A, K மற்றும் B12, கொழுப்பு, அமினோ ஆசிட், ஆண்டி ஆக்ஸிடண்ட் என பல ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது பால்.
பாலில் சத்துக்கள் இருப்பது உண்மை தான், ஆனால் இதனால் பல தீமைகளும் உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா?
யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
கொலஸ்ட்ரால், அதாவது கொழுப்பு சத்து அதிகம் இருப்பவர்கள், கல்லீரல் பிரச்சினைகள் உள்ளவர்கள் பால் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
இத்தகையவர்களுக்கு கல்லீரல் பிரச்சனை காரணமாக பால் எளிதில் ஜீரணம் ஆகாமல் பிரச்சனையை ஏற்படுத்தும். கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நபர் தொடர்ந்து புரதச்சத்து நிறைந்த உணவை உட்கொண்டால், பிரச்சனை அதிகமாகும்.
அதே போல் இரவில் பால் குடித்த உடனேயே தூங்கினால், அது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. தூங்குவதற்குகு 2 முதல் 3 மணி நேரத்திற்கு முன் பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் பாலை அதிகமாக குடித்தால், அது எலும்பு முறிவுகளுக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது. அதாவது, சிறிய விபத்துகள் ஏற்பட்டாலே, உடல் எலும்புகள்; முறிந்துவிடுமாம்.
தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில், பால் அதிகமாக குடிப்பவர்கள் விரைவில் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரியவந்துள்ளது.
அதாவது அந்த ஆய்வில் ஒரு நாளைக்கு மூன்று கிளாஸ் தினமும் குடித்தால் இறப்பின் ஆபத்து இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
பெண்களுக்கு இந்த ஆபத்தின் அளவு சற்று அதிகம் என்றே கூறப்பட்டுள்ளது. பால் அதிக அளவில் குடிக்கும் நபர்களுக்கு உடல் சோர்வு, வயிறு மந்தம் ஏற்படுதல், நோய் அழற்சி போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.
5 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள், தினமும் 400 மி.லி பால் சாப்பிடுவது நல்லது என பரிந்துரைக்கப்படுகிறது.