நிரந்தர வைப்புத் தொகைக்கு அதிக வட்டி வழங்கும் top 5 வங்கிகள்!
பொதுவாக பணத்தை சேமித்து வைக்க வேண்டிய அவசியம் அனைவருக்கும் இருக்கும். பணத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றதே தவிர ஒருபோதும் குறையாது.
பாதுகாப்பான மற்றும் அதிக இலாபம் தருகின்ற முதலீடு ஒன்றில் உங்களது பணத்தினை முதலிடுவதற்கு எதிர்பார்க்கின்றீர்களா?
மூத்த குடிமக்களின் நிரந்தர வைப்புத் தொகைக்கு அதிகளவாக வட்டி விகிதங்களை வழங்கும் பட்டியலின் அடிப்படையில் முதல் 5 இடங்களில் இருக்கும் வங்கிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அதிக வட்டி வழங்கும் வங்கிகள்
மூத்த குடிமக்களின் நிரந்தர வைப்புத் தொகைக்கு SBM வங்கி 8.8 சதவீத வட்டி கொடுக்கின்றது. 15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை முதிர்ச்சியடையும் நிரந்தர வைப்புத் தொகைக்கே இந்த வட்டி கொடுக்கப்படுகின்றது.
DCB வங்கி மூத்த குடிமக்களுக்கு 8.55 சதவீத வட்டியை கொடுக்கின்றது . 19 மாதங்கள் முதல் 20 மாதங்கள் வரை முதிர்ச்சியடையும் நிரந்தர வைப்புத் தொகைக்கு இந்த வட்டி கொடுக்கப்படுகின்றது.
RBL வங்கி மூத்த குடிமக்களுக்கு அவர்களின் FD மீது 8.5 சதவீத வட்டியை கொடுக்கின்றது.18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் நிரந்தர வைப்புத் தொகைக்கு இந்த வட்டி வீதம் வழங்கப்படுகின்றது.
IDFC First வங்கியின் மூத்த குடிமக்களுக்கு அதன் நிரந்தர வைப்புத் தொகைக்கு 8.4 சதவீத வட்டி கொடுக்கின்றது. 500 நாட்களில் முதிர்ச்சியடையும் நிரந்தர வைப்புத் தொகைக்கு இந்த வட்டியை கொடுக்கின்றது.
மூத்த குடிமக்களுக்கு பந்தன் வங்கி தனது நிரந்தர வைப்புத் தொகைக்கு 8.35 சதவீத வட்டியை கொடுக்கின்றது ஓராண்டில் முதிர்ச்சியடையும் நிரந்தர வைப்புத் தொகைக்கே குறி்த்த வட்டிவீதம் கொடுக்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |