அசல் சொத்து பத்திரம் தொலைந்து விட்டதா? பதறாமல் முதல் இத செய்யுங்கள்
பொதுவாக சொத்து பத்திரங்களை கவனமாக வீடுகளில் வைத்திருப்பார்கள்.
இவை தொலைந்து விட்டால் மோசடிகள் நடப்பதற்கு அதிகம் வாய்ப்பு இருக்கிறது.
சிலர் கடுமையான கடன் சுமை மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்காக சொத்து பத்திரத்தை அடமானம் வைத்து கடன் பெறுவார்கள். இப்படியான நேரங்களில் கண்டிப்பாக அந்த சொத்தின் அசல் பத்திரம் தேவைப்படும்.
அந்த அசல் பத்திரம் இல்லை என்றால் கடன் பெறுவதில் சிக்கல் ஏற்படும்.
வங்கிகளில் கடன் பெற வேண்டும் என்றால் சொத்து தொடர்பான அனைத்து ஆவணங்களும் கைப்பட வைத்திருக்க வேண்டும். இவை ஒரு சந்தரப்பத்தில் தொலைத்துவிட்டால் அது தொடர்பானம் நகல் ஆவணங்களை பெற்றிருக்க வேண்டும்.
அந்த வகையில் அசல் பத்திரம் தொலைந்து விட்டால் அது தொடர்பான நகல் ஆவணங்களை எப்படி பெறலாம் என்பதனை தொடர்ந்து இந்த பதிவில் பார்க்கலாம்.
Duplicate Copy of Property Documents
1. FIR பதிவு செய்ய வேண்டும்
சொத்து சம்பந்தமான அசல் ஆவணங்கள் தொலைந்து விட்டால் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் செய்து, FIR பதிவு செய்ய வேண்டும்.
2.செய்தித்தாள் விளம்பரம்
சொத்து பத்திரம் தொலைந்து விட்டது என FIR பதிவு செய்த பின்னர் செய்தித்தாளில் விளம்பரம் செய்ய வேண்டும். இந்த விளம்பரம் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியாக வேண்டும். அதில், தொலைந்த சொத்து ஆவணம் கிடைத்தால் அவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய விவரங்கள் பற்றிய அறிவிப்பை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
3. பகிர்வு சான்றிதழ்
Housing Societyயால் கொடுக்கப்பட்ட பங்குச் சான்றிதழ் தொலைந்து விட்டது என்றால் அதற்கும் மீண்டும் வெளியிடுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு மேற்குறிப்பிட்ட இரண்டு விடயங்களையும் கண்டிப்பாக செய்திருக்க வேண்டும்.
4. பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டியவை
சொத்தின் விபரங்கள், தொலைந்த ஆவணங்கள், FIR நகல் மற்றும் செய்தித்தாள் விளம்பர அறிவிப்பின் நகல் ஆகியவற்றை பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு முத்திரைத் தாளில் ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும். அத்துடன் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்த சான்றிதழை நோட்டரி மூலம் சான்றளிக்கவும்.
5. தொலைந்து போன ஆவணக்களுக்கு நகல் பத்திர விண்ணப்பம்
தொலைந்து போன சொத்து பத்திரத்தின் நகல்களைப் பெற்றுக் கொள்வதற்காக மேற்குறிப்பிட்ட ஆவணங்களை சொத்துப் பதிவாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும். நகல் பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை பதிவாளர் அலுவலகத்தில் Deposit செய்ய வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.