IT படித்தால் எந்த நாட்டில் வேலை கிடைக்கும் தெரியுமா? கனவுகளை நனவாக்கும் பதிவு
பொதுவாக நம்மில் பலருக்கும் படித்து விட்டு வெளிநாட்டில் செட்டில் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
இன்னும் சொல்லப்போனால் பலருக்கும் வெளிநாட்டு வேலை என்பது கனவாகவே இருக்கும்.
இப்படியான கனவுகளை வைத்திருப்பவர்கள் பள்ளி படிப்பை முடித்து விட்டு IT (Information Technology) படிக்கலாம்.
இதன் மூலம் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு அதிகமாக இருக்கிறது. கணனி தொடர்பிலான கல்வி அறிவை வளர்த்து கொண்டால் எங்கு வேண்டும் என்றாலும் வேலைச் செய்யலாம்.
அந்த வகையில், IT (Information Technology)படித்தால் எந்தெந்த நாடுகளில் வேலை கிடைக்கும் என்பதை தொடர்ந்து இந்த பதிவில் பார்க்கலாம்.
IT படித்தால் எந்த நாட்டில் வேலை கிடைக்கும்?
1. உக்ரைன்
IT படிக்கும் மாணவர்களுக்கு உக்ரைன் நாட்டில் வேலை கிடைக்கும். கடல்சார் மென்பொருள் மேம்பாட்டிற்கான சிறந்த நாடுகளில் ஒன்றாக உக்ரைன் நாடு மாறிக் கொண்டு வருகிறது.
இதன்படி, உக்ரைனில் 172,000 IT வல்லுநர்கள் மற்றும் 750 -க்கும் மேல் IT சேவை நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் இந்த நாட்டில் வேலைக்கு முயற்சி செய்யலாம்.
2. போலந்து
தற்போது வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்று தான் போலந்து. இந்த நாட்டில் 255,000 IT நிபுணர்கள் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஆண்டுதோறும் 15,000 மாணவர்கள் பட்டம் பெற்று வெளியேறுகின்றனர். நம் நாட்டில் IT படித்துவிட்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல நினைப்பவர்கள் போலந்தில் வேலைக்கு முயற்சிக்கலாம். அங்கு சென்றால் நீங்கள் நினைத்த வாழ்க்கை கிடைக்கும்.
3. கனடா
தற்பொழுது கனடா நாட்டின் தொழில்நுட்பத் துறையில் IT நிபுணர்களுக்கான தேவை அதிகரித்து கொண்டே செல்கின்றன. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வசிப்பவர்கள் தான் கனடாவில் அதிகமாக இருக்கிறார்கள்.
Cloud Engineering மற்றும் பிற வகையான Web Developer -களுக்கு நல்ல ஊதியத்துடன் கூடிய வேலை வாய்ப்புகள் கனடாவில் இருக்கின்றன. அதுவும் IT வேலைகளுக்கு கனடா சிறந்த நாடாக உள்ளது.
4. அமெரிக்கா
சிலருக்கு அமெரிக்காவிற்கு செல்ல வேண்டும் என்பது கனவாகவே இருக்கும். அமெரிக்காவில் உள்ள சிறந்த தொழில்நுட்ப வேலைகளில் மென்பொருள் உருவாக்குநர்கள் 2 வது இடத்தைப் பிடிக்கின்றனர்.
இங்கு IT படிப்புக்கு பல்லாயிரக்கணக்கான வேலைகள் அதிகரித்து வருகின்றன. நம் நாட்டில் படித்து வீட்டில் வெட்டியாக இருப்பதற்கு இப்படியான வேலைகளுக்கு அப்ளை செய்யலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |