சாஸ்த்திரம்: படுக்கையில் இருந்து ஏன் சாப்பிடக் கூடாது? மறந்தும் இந்த தவறை செய்யாதீங்க
பொதுவாக இந்து மதத்தை பின்பற்றும் மக்கள் சாஸ்த்திரம், சம்பிரதாயங்களை காலம் காலமாக பின்பற்றி வருகிறார்கள்.
இவர்கள் எதை விட்டாலும் சாஸ்த்திரங்கள் பார்ப்பதை விடமாட்டார்கள். இதில் சில அறிவியல் காரணங்களும் இருப்பதால் தலைமுறை தலைமுறையாக தொடர்கின்றன.
அந்த வகையில் சிலர் படுக்கையில் இருந்து சாப்பிடக் கூடாது என்பார்கள். இதற்கான காரணம் தெரியாவிட்டாலும் தற்போது வரை செய்து வருகிறார்கள்.
படுக்கையில் அமர்ந்து ஏன் சாப்பிடக் கூடாது என்பதற்கான காரணங்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
படுக்கையில் ஏன் அமர்ந்து சாப்பிடக் கூடாது
1. சாஸ்திரத்தின் படி, படுக்கையில் அமர்ந்து சாப்பிடும் வீடுகளுக்கு வறுமை ஏற்படலாம். எப்போதும் கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கி தரையில் அமர்ந்து சாப்பிட வேண்டும் என சொல்லப்படுகின்றது.
2. சாப்பாட்டை எடுத்தவுடன் படுக்கைக்கு செல்வதை சிலர் வழக்கமாகவே கொண்டிருப்பார்கள். ஆனால் இது சாஸ்த்திரப்படி தவறு என கூறப்படுகின்றது. ஏனெனின் படுக்கையில் அமர்ந்து சாப்பிடும் பொழுது லட்சுமி தேவியின் அருள் கிடைக்காமல் போகலாம்.
3. படுக்கை என்பது தூங்குவதற்கான இடமாக பார்க்கப்படுகின்றது. இந்த இடத்தில் சாப்பிடும் பொழுது சில சமயங்களில் ஆரோக்கிய பிரச்சினைகளும் ஏற்படலாம்.
4. வீட்டில் எந்த காரணமும் இல்லாமல் அமைதி குறைவது படுக்கை அறையில் தான். இதனால் இங்கு அமர்ந்து சாப்பிடும் பொழுதும் உங்களின் அமைதியிலும் பிரச்சினை ஏற்படலாம். சில வேளைகளில் வீட்டின் அமைதியும் குறையலாம்.
5. சாஸ்திரத்தின் படி, படுக்கையில் அமர்ந்து சாப்பிடுபவர்களுக்கு கடன் பிரச்சினை அதிகரிக்கும் எனக் கூறப்படுகின்றது. சிலருக்கு இதனால் தூக்கமும் வராமல் இருக்கலாம்.
6. படுக்கையில் அமர்ந்து சாப்பிடுபவர்களுக்கு தூக்கம் சரியாக வராது. ஏனெனின் சாப்பாடு வாசணையால் பூச்சிகளின் அட்டகாசம் அதிகமாக இருக்கலாம்.
7. சாப்பிடும் போது தட்டையான இடத்தில் அமர்ந்திருந்தால் தான் . அன்னபூரணியின் அருள் உங்களுக்கு கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |