ஒருவர் கொட்டாவி விட்டால் மற்றவருக்கும் வரும் கொட்டாவி... இதற்கு காரணம் தெரியுமா?
ஒருவருக்கு கொட்டாவி வந்தால் அருகில் இருப்பவர்களுக்கும் கொட்டாவி வருவது ஏன் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நாம் அன்றாடம் செய்யக்கூடிய அனிச்சையான நிகழ்வில் கொட்டாவியும் ஒன்றாகும். வாயை நன்கு திறந்து, மூச்சை உள்ளிழுத்து மெல்ல வெளியிடுவதே கொட்டாவியாகும்.
கொட்டாவி பெரும்பாலும் நாம் சோர்வடையும்போது, சலிப்பாக உணரும்போது, மற்றொருவர் கொட்டாவி விடும்போது வரக்கூடியது.
வாயைத் திறப்பது மட்டுமின்றி தொண்டை, முகம் உள்ளிட்ட தசைகள் இயங்க கொட்டாவி காரணமாக இருக்கின்றது. நமது சோர்வு, தூக்க உணர்வு போன்றவற்றுடன் தொடர்புடையது மட்டுமின்றி உடலின் பல விடயங்களுடன் தொடர்புள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
image: shutterstock
ஏன் கொட்டாவி வருகிறது?
கொட்டாவி என்பது ஆழமான சுவாசம் வெளியிடும் நிகழ்வு மட்டுமின்றி, மூளையில் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தவும், ஆக்சிஜன் தேவையை அதிகரிக்கவும், விழிப்புணர்வு உணர்வை மேம்படுத்தவும் நிகழ்கின்றது.
தொடர் கொட்டாவி ஏற்பட மூளை சம்பந்தப்பட்ட பகுதிகள் தான் காரணமாக உள்ளது. சிறப்பு மூளை செல்களான மிரர் நியூரான் அமைப்பு மற்றவர்கள் செயல்களை பிரதிபலிக்கும் தன்மை உடையது. இதுவே ஒருவர் கொட்டாவி விடும்போது மற்றொருவரை தூண்டுகிறது.
image: istock
மூளையில் உள்ள ஹைப்போதலாமஸில் வரும் சிக்னல் தான் கொட்டாவி வருவதற்கு முதல் காரணம். ஹைபோதலாமஸில் இருந்து வரக்கூடிய கட்டளையானது ஆழமாக மூச்சை உள்ளே இழுத்து தசை நீட்சியை செயல்படுத்த அறிவுறுத்துகிறது.
மற்றவர்களுக்கும் கொட்டாவி வருவது ஏன்?
பெரும்பாலும் தூக்கம் வருவதன் அறிகுறியாகத் தான் கொட்டாவி கூறப்படுகின்றது. ஒருவர் கொட்டாவி விடுவதைப் பார்த்து மற்றவர்கள் கொட்டாவி விடுவது பச்சாதாபம் ஒரு காரணமாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றது.
மற்றொருவர் கொட்டாவி விடும் போது நாமும் கொட்டாவி விடுவதால் அவர்களுடைய உணர்வுகளை பகிர்ந்து கொள்ள முயல்கிறோம். இது உணர்வுரீதியான புரிதலை உணர்த்துவற்கானது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
யாரேனும் கொட்டாவி விடுவதைக் கண்டு நீங்கள் கொட்டாவி விட்டால், உங்களுடைய மூளை பச்சாதாபமாக நடந்து கொள்ள முயல்கிறது.
இதற்கு மிரர் நியூரான்கள் ஒரு காரணமாகவும் இருக்கலாம். இந்த நியூரான்கள் மற்றவர்கள் செய்யும் செயலை கவனிக்கும்போதே செயல்படும்.
குடும்பத்தினர், நட்பு வட்டாரம் மட்டுமின்றி வளர்ப்பு பிராணியுடனும் பந்தத்தைப் பகிரும்போது கொட்டாவி சங்கிலித்தொடர்ப்பு போன் அன்னிச்சையாக நிகழ்கின்றது.
கொட்டாவியை குறைக்க முடியுமா?
கொட்டாவி விடுவதை குறைக்கவும், தவிர்க்கவும் சுய விழிப்புணர்வு மட்டுமே எளிமையான வழியாகும். ஒருவர் கொட்டாவி விடும் அதனை நீங்கள் தவிர்க்க நினைக்கலாம். அத்தருணத்தில் உங்களை திசை திருப்ப மற்ற செயலில் ஈடுபட வேண்டும்.
உங்களுடைய மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிகளில் ஈடுபடுவதுடன், போதுமான அளவு தூங்கவும் செய்யவும். இதுவே தொற்று கொட்டாவியை அதிகரிக்கும் காரணியாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |